நடத்துனராக வேலை பார்த்த பஸ் டெப்போவை பார்த்து பரவசமான ரஜினி
Rajini
பெங்களூரில் தாம் பஸ் நடத்துனராக வேலை பார்த்த அரசு பஸ் டெப்போவை பார்த்து நடிகர் ரஜினிகாந்த் பரவசமானார்.
ஒரு காலத்தில் பெங்களூரில் அரசு போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துனராக வேலை பார்த்தவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது சூப்பர் ஸ்டார் என்கிற உச்ச நிலையில் இருக்கிறார் அவர். சமீபத்தில் வெளியான அவரது ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது. இதற்கிடையே இமயமலைக்கு சென்று திரும்பிய ரஜினி, இன்று(29.8.2023) பெங்களூரு சென்றார்.
பழைய நண்பர்களை சந்தித்த அவர், தான் வேலை பார்த்த அரசு போக்குவரத்து கழக டெப்போவிற்கு சென்றார். அங்குள்ளவர்களிடம் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்து பரவசமானார். போக்குவரத்து ஊழியர்களிடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார். இது சம்பந்தமான போட்டோ, வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.