திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: நெல்லை, தூத்துக்குடியில் இருந்து 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
Tnstc News
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என திருநெல்வேலி கோட்ட மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் வருகிற 24.11.2026 அன்று பௌர்ணமி கிரிவலம் மற்றும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ளது.
இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி கோட்டம்) சார்பில் தென் மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 150 கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து வருகிற 22.11.2026 மற்றும் 23.11.2026 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அதேபோல், திருவண்ணாமலையில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு 24.11.2026 மற்றும் 25.11.2026 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு குழுவாகச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக ஒப்பந்த அடிப்படையிலும் (On Contract) பேருந்துகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான பக்தர்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழக அலுவலர்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு மற்றும் இதர விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
திருநெல்வேலி: 94875 99053, 94890 52016
- தென்காசி: 94875 99053, 94890 52016
- தூத்துக்குடி: 94890 52015
- தூத்துக்குடி புறநகர் கிளை: 94875 99063
- நாகர்கோவில்: 94875 99082, 94875 99083
எனவே, கார்த்திகை தீபத் திருவிழா மற்றும் பௌர்ணமி கிரிவலத்தில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் இந்தச் சிறப்புப் பேருந்து வசதிகளைப் பயன்படுத்தி பாதுகாப்பான மற்றும் சிரமமற்ற பயணத்தை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி கோட்டம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
nadunilai.com