புதுக்கோட்டை - துறைமுகம் உள்பட 11 மினி பஸ் சேவைகள் - செயல்முறை ஆணைகளை கலெக்டர் வழங்கினார்
Thoothukidi collecto

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (21.03.2025) தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்துறை சார்பில் 11 வழித்தடங்களில் மினிபஸ் சேவை வழங்க விண்ணப்பதாரர்களுக்கு செயல்முறை ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும், பொதுமக்கள் பயனடையும் வகையில் மினிபஸ் சேவை வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. தமிழக அரசின் ஆணையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களான தூத்துக்குடியில் 6 வழித்தடங்களுக்கும் மற்றும் கோவில்பட்டியில் 5 வழித்தடங்களுக்கும் ஆக மொத்தம் 11 வழித்தடங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 11 வழித்தடங்களுக்கான செயல்முறை ஆணைகளை சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் 1. ஹார்பர் வாட்டர் டேங்க் முதல் முத்தூட் பைனான்ஸ் புதுக்கோட்டை வரையிலும் (சிவந்தி ஆதித்தனார் மன்றம் அருகில்), 2. மேரி மாண்டிசோரி பிளே ஸ்கூல் முதல் பழைய பேருந்து நிலையம் வரையிலும், 3. பழைய பேருந்து நிலையம் முதல் ஓம்கார சக்தி அம்மன் கோவில் வரையிலும் (பொட்டல்காடு வரை), 4. பழைய பேருந்து நிலையம் முதல் ஜோதி நகர் வரையிலும், 5. முள்ளக்காடு வாட்டர் டேங்க் முதல் திரேஸ்புரம் வரையிலும் 6. திரேஸ்புரம் முதல் அய்யனடைப்பு சண்முகபுரம் வரையிலும், கோவில்பட்டியில் 1. குளத்தூர் முதல் சோழபுரம் வரையிலும், 2. நாகலாபுரம் முதல் எஸ்.குமாரபுரம் வரையிலும், 3. எட்டையபுரம் முதல் லிங்கம்பட்டி வரையிலும், 4. வேலாயுதபுரம் முதல் அரியநாயகிபுரம் வரையிலும், 5. கழுகுமலை முதல் ஆண்டிப்பட்டி வரையிலும் மினிபஸ் சேவைகள் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வின் போது, திருநெல்வேலி துணைப்போக்குவரத்து ஆணையர் என்.ரவிச்சந்திரன், தூத்துக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஏ.கே.முருகன், கோவில்பட்டி வட்டாரப்போக்குவரத்து அலுவலர் ஆர்.கிரிஜா, மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஹெச்.பெலிக்சன் மாசிலாமணி (தூத்துக்குடி), பாத்திமா பர்வீன் (திருச்செந்தூர்), சுரேஷ் விஸ்வநாத்(கோவில்பட்டி) மற்றும் விண்ணப்பதாரர்கள் உடன் இருந்தனர்.