தூத்துக்குடியில் நள்ளிரவு நடக்கும் பைக் திருட்டுக்கள் - அதிரடி நடவடிக்கை மூலம் தடுக்க வேண்டும் காவல்துறை
Theft News

எப்போதாவது, எதாவது ஒரு சம்பவம் நடந்தால் அது அபூர்வமாக பேசப்படுவதும், பார்க்கபடுவதுமாக இருக்கும். அதுவே அடிக்கடி நடந்தால் அது வழக்கமான ஒன்றாவிடும் அப்படித்தான் ஆகிவிட்டது போல் தெரிகிறது தூத்துக்குடியில் பைக் திருட்டு சம்பவங்கள்.
தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தனது விலை உயர்ந்த பைக்கை கடந்த 17ம் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு பின்பு 18ம் தேதி காலையில் பார்க்கும் போது பைக் காணாமல் போயிருக்கிறது. அதனை எங்கும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பார்த்தபோது இரண்டுபேர் பைக் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவது தெரிந்திருக்கிறது. இந்த ஆதாரத்தை வைத்து தூத்துக்குடி தென் பாகம் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கின்றனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பைக் காணாமல் போய் ஐந்து நாட்கள் ஆகிவிட்டதால் பைக்கின் நிலைகுறித்து அச்சத்தில் உள்ள மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்று இரவு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மற்ற பகுதியிலும் இதுபோன்று பைக் திருடியுள்ளனர். இது குறித்த சிசிடிவி கேமரா வீடியோவையும் சேகரித்து வைத்துள்ளதை காட்டி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசிடம் மன்றாடி வருகின்றனர்.