தொல்லியல் அகழாய்வு முறைகள் பயிற்சிப் பட்டறை – ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்தது
Education News

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, தமிழ்த்துறை மற்றும் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை இணைந்து “தொல்லியல் அகழாய்வு முறைகள்” எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ஏ.பி.சி.மகாலட்சுமி அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச. மல்லிகா வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் க. சுப்புலட்சுமி, வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் பாபு ஆகியோர் பேசினர்.
பயிற்சிப் பட்டறையின் சிறப்புரையாளர் மற்றும் சிறப்புவிருந்தினராக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையைச் சேர்ந்த அலுவலர் பா. ஆசைத்தம்பி பங்கேற்றார். அவர், மாணவிகளுக்காக தொல்லியல் அகழாய்வு முறைகள் குறித்த விரிவான செய்முறைப் பயிற்சியை வழங்கினார். இந்த நிகழ்வில் இரு கல்லூரிகளிலிருந்தும் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
வ.உ.சி. கல்வியியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் இராஜதுரை, உயிரியியல் துறை பேராசிரியர் ரூபினா தனசுதா முன்னிலை வகித்தனர். நிறைவில், ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் சிவகாமி சுந்தரி நன்றி கூறினார். பயிற்சிப் பட்டறை சிறப்பாகவும், பயனளிக்கக் கூடிய வகையிலும் இருந்ததாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.