நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் வழங்கினார்!

minister Anitharadhakrishnan news

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் வழங்கினார்!

நாசரேத்,ஆக.03:நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவர்களுக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளியில் தமிழக அரசின்விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடை பெற்றது. திருச்செந்தூர்கோட்டாட்சியர் குருச்சந்திரன் தலைமைவகித்தார். தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, நாசரேத் பேரூராட்சி தலைவர் நிர்மலாரவி, பள்ளி தலை மையாசிரியர் கென்னடி தேவராஜ் ஆகியோர்முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ஜெயசீலன் சேகர் டேவிட் வரவேற்று பேசினார்.

விழா வில்தமிழக மீன்வளத்துறை மற்றும் மீனவர் நலன், கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ஆர். இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது : 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் கல்வி மற்றும் மருத்துவம் ஆகிய  இரண்டையும் தனது இரண்டு கண்களாக பாவித்து மக்களுக்கு பணி செய்து வருகிறார். கல்வி ஒருவருக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் அளிக்கிறது. தமிழக முதல்வர் கல்வி கற்றலில் முக்கியத்துவத் தை உணர்ந்து அதற்காக அக்கறையுடன் செயல்பட்டு அதற்கான திட்டங்களை வகுத்து வருகிறார். 

கல்விக்காக அதிக நிதியும் ஒதுக் கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தில்  படிக்காத மாணவர்கள் கல்விப் பெற வேண்டும். மேலும் அவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி மாணவர்கள் கண்டிப்பாக கல்வி பயில வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் ஐந்து கிலோ மீட்டருக்குள் ஒரு பள்ளியை திறந்து வைத்து அனைத்து சிறுவர், சிறுமிகளையும் கல்வி படிக்க செய்தார்.பின்னர் முன்னாள் முதல்வர் கலைஞர்  கருணாநிதி சத் துணவுதிட்டத்தில் சத்தான உணவு இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு முட்டைகளும் வழங்கினார். 

மேலும் தமிழ்நாட்டில் உள்ள மாணவ மாணவிகள் தாங் கள் கல்வி பயிலும் போது சிரமம் ஏற்படக்கூடாது என் பதற்காக 14 வகையான திட்டங்களையும் அறிமுகப் படுத்தினார்.எப்பொழுதும் மாணவர்கள் சிரமமின்றி பள்ளிக்கு வருவதற்காக இலவச சைக்கிள்களையும் வழங்கிவருகிறார். நாசரேத் கல்விக்கும் விளையாட்டிற் கும் ஒரு முன்மாதிரியான நகரமாக விளங்குகிறது மாணவர்கள் பிற்காலத்தில் பல்வேறு பதவிகளை வகிக்க இப்பொழுதே முடிவெடு த்து நன்றாக படிக்க வேண் டும். மேலும் மாணவர்களா கிய நீங்கள் உங்களுடைய பெற்றோருக்கும் ஆசிரிய ருக்கும் கீழ்ப்படிந்து அவர் கள் சொல்படி நடக்க வேண் டும்.அப்போதுதான்பிற்கால த்தில் நல்ல உயர் பதவிகளி ல் இருப்பீர்கள்.இவ்வாறு பேசினார்.

இந்நிகழ்வில் திமுகமாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ் ஆர் எஸ் உமரிசங்கர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இராமஜெயம், தூத்துக்குடி ஆவின் சேர்மன் சுரேஷ்கு மார், ஆழ்வார்திருநகரி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், நாசரேத்நகர திமுக செயலாளர் ஜமீன்சாலமோன், கருங் குளம் யூனியன் சேர்மன் ராஜேந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் பேரின்பராஜ், நாசரேத் பேரூராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல் அலெக்ஸ் புரூட்டோ,  பிச்சுவிளை சுதாகர், அருள்ராஜ் ஆசிரியர், கருத்தையா, ஜேம்ஸ், மாரிமுத்து, செல்லத்துரை, அன்பு தங்க பாண்டியன், தேவதாசன், ஹாரிஸ் ரவி, ராமச்சந்திரன், சிலாக்கிய மணி, ஏகோவாகான், சேகர் மனோகரன், உடையார், மாற்கு ஜான்சன், சரவணன், பால்ராஜ்,அகஸ்டின், மாற்கு, ஜூலியட்,கஸ்தூரி,ஜெமி, தொண்டரணி சுடலைமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.