வயர்மென் ஹெல்பர் தேர்வு வரும் 27,28ம் தேதிகளுக்கு மாற்றம் - ஆட்சித்தலைவர் அறிவிப்பு
TNEB NEWS
தமிழ்நாடு மின் வாரியத்தில் வயர்மென் ஹெல்பர் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 13 மற்றும் 14ம் தேதி தகுதி தேர்வு நடைபெறும் என்று கலெக்டர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடைபெறவில்லை. தற்போது அதற்கான மறு தேதியை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும் விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
nadunilai.com