குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று முதல் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது

Kulasai News

குலசை முத்தாரம்மன் கோவிலில் இன்று முதல் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது

மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி குலசை முத்தாரம்மன் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு தினசரி நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :மார்கழி மாதம் பிறந்துள்ளதை தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) தொடங்கி, வரும் ஜனவரி 14ஆம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடைபெற உள்ளது. இம்மாதத்தில், கோவில் நடை தினமும் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு, காலை 5.15 மணிக்கு தனுர் மாத பூஜை, காலை 7.45 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12.00 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து மதியம் 12.30 மணிக்கு நடை திருக்காப்பிடப்பட்டு, மாலை 4.00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். மாலை 5.00 மணிக்கு சாயரட்சை, இரவு 8.00 மணிக்கு இராக்கால தீபாராதனை நடைபெறவுள்ள நிலையில், இரவு 8.30 மணிக்கு நடை திருக்காப்பிடப்படும்.

மேலும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு மற்றும் திருவிழா நாட்களில் பூஜை நேரங்களில் மாற்றம் இருக்கும். இவ்வாறு திருக்கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.