பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் - நடுநிலை.காம்

india

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் - நடுநிலை.காம்

இந்தியா என்கிற பாரத தேசம் பல்வேறு வகையான நிலப்பரப்பை பெற்றிருந்தாலும் ஒரே தேசமாக விளங்கி வருவதற்கு கலாச்சாரமும், பண்பாடும்தான் காரணம். வந்தாரை வாழவைக்கும், வந்தாரை வாழவிடும் பண்புகளை சாதகமாக்கிய அந்நிய தேசத்தால் ஒரு கட்டத்தில் பாரத தேசத்தை ஆக்கிரமித்தனர். ஆளுகையை கைப்பற்றிய அந்நியர், பாரத கலாச்சாரத்தையும், பண்பாடுகளையும் அழித்து ஒழிக்க எவ்வளவோ போராடினார்கள். நம்மிடம் நட்பை பாராட்டி நயவஞ்சகமாக நுழைந்தார்கள். படிப்படியாக அவர்கள் வழிக்கு நம்மை ஆட்படுத்தினர். அடிமையாக்கி நம் தேசத்தின் வளங்களை கொள்ளையடித்தனர். மேலும் நம் கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சித்தனர். அப்போது வெகுண்டெழுந்த நம்மவர்கள், தியாகிகள் அந்நியரை அடித்து விரட்டினார்கள். அதற்காக எத்தனையோர்கள் போனது. இன்று நாம் சுதந்திரமாக வலம் வருவதற்கும், கலாச்சாரத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும் அந்த தியாகிகள்தான் காரணம். தியாகிகளின் முயற்சியால் இந்தியா எம்கிற பாரத தேசம் விடுதலை பெற்றது. 80வது ஆண்டு விடுதலை பெற்ற தினத்தை நாம் இன்று சுதந்திர தினமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 

தியாகிகளால் பெற்ற சுதந்திரத்தை வேறுபாடுகளால் வீணாக்கிவிட கூடாது. எனவே சாதி, மதம், மொழி வேறுபாடுகளை மறந்து இந்திய தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதன் மூலம் பெற்ற சுதந்திரத்தை பேணி காக்க முடியும் என்பதை இந்திய மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். 
-நடுநிலை.காம்