மதுரை மாநாட்டில் நான் அரசியல் பேசுவேன் - திரேஸ்புரம் கடற்கரையில் அண்ணாமலை பேச்சு
Annamalai
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வி த லீடர் புதிய இயக்கத்தின் தொடங்கியதும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கருத்துகளை கொண்ட கூடுகைகளை நடத்துவது என்று முடிவு செய்தார். அதன்படி ஜூலை மாதத்தில் போதை பொருட்களுக்கு எதிரான கூட்டங்களை நடத்தினார். தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுப்புற சூழலை பாதுகாப்போம், தூய்மைப்படுத்துவோம்,நெய்தலை நேர் செய்வோம் என்ற முழக்கத்துடன், சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரடியாக தூய்மைபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அவரது சுற்றுபயணம் நடந்தது. கன்னியாகுமரி கடற்கரை, நெல்லை மாவட்டத்தில் உவரி கடற்கரை, தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அடுத்த குலசேகரப்பட்டினம் கடற்கரை மற்றும் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை ஆகிய கடற்கரை ஓரங்களில் வி த லீடர் புதிய இயக்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை பார்வையிட்டு சிறப்புரையாற்றி புதிய இயக்கத்தினருடன் கலந்துரையாடி பேசினார்.
முன்னதாக அண்ணாமலைக்கு நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதில் கன்னியாகுமரி நகராட்சி உறுப்பினர் சி.எஸ். சுபாஷ் மற்றும் நிர்வாகிகள்,நெல்லை மாவட்டம் கணேஷ்மூர்த்தி உட்பட நிர்வாகிகளும்,தூத்துக்குடி மாவட்டத்தில் உமரி சத்தியசீலன், ஜான்ரவி, திருச்செந்தூர் சிவமுருகஆதித்தன்,சின்னதங்கம்,பலவேச கார்த்திகேயன் மாதவன்,ராஜேஷ்கனி, ஜமீன்கிருஷ்ணன்,துர்க்கையப்பன், ஆறுமுகநேரி சண்முகம்,சாத்தான்குளம் சரவணன், சிவத்தையாபுரம் ஹரிகரசுதன், ஸ்ரீவைகுண்டம் பாலமுருகன், விளாத்திகுளம் காட்டுராஜா, கோவில்பட்டி சீனிவாசன், கடம்பூர் அருண்ராஜா,ஆறுமுகம்,சிலம்பொலி, பொன் விக்னேஷ், வித்யா முருகன்,உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் வீ த லீடர் அமைப்பு சார்பில் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியில் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது திடீரென பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையிலும் அவர் அங்கே கூடியிருந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், வீ த லீடர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடற்கரையை சுத்தம் செய்து நல்ல விஷயத்தை செய்த பின்பு வருண பகவானின் ஆசிர்வாதம் நமக்கு கிடைத்துள்ளது. இந்தப் பகுதியில் சுத்தமான கடற்கரையை உருவாக்குவதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்று காலை 8.30 மணிக்கு கன்னியாகுமரி பகுதியில் ஆரம்பித்த இந்த சுத்தம் செய்த செய்யும் பணி, பின்னர் உவரி, குலசேகரப்பட்டினம் தற்போது தூத்துக்குடியில் செய்து முடித்திருக்கிறோம். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரையிலான 175 கிலோ மீட்டர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்து இருக்கிறோம். 365 நாட்களில் இந்த கடற்கரையை சுத்தம் செய்ய இருக்கிறோம். அடுத்த 365 நாட்களில் இந்தியாவில் இதுபோன்ற கடற்கரை வேறு எங்கும் இல்லை என்று அளவிற்கு அனைவரும் வீ த லீடர்ஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதை சுத்தப்படுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்த இடத்தை சிறிய வேலைகளை செய்து மீண்டும் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறோம். 6 கழிப்பறைகளை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடுத்து இருக்கிறோம். ஆதிமுனீஸ்வரர் திருமண மண்டபம் சீரமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடுத்து இருக்கிறோம். நாம் இன்று ஆரம்பித்திருப்பது அறம் செய்ய விரும்பு ஒரு சின்ன வேலையை ஒரு ஊரில் ஆரம்பித்து இருக்கிறோம். நம்முடைய நோக்கம் எல்லாம், நம்முடைய செயலின் மூலமாக மக்களுடைய அன்பை பெற வேண்டும் என்பதுதான், நம்மளுடைய நோக்கம் நம்மால் மக்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்க வேண்டும் என்பதில் தெள்ளத்தெளிவாக இருக்கிறோம். இந்தப் பகுதியில் மீனவ சொந்தங்களோடு இணைந்து காலையிலிருந்து பணிகளை செய்யும் அனைவருக்கும் நன்றி, பாராட்டுக்கள். மழையில் நீண்ட நேரம் நின்ற படி நிற்கிறீர்கள். மறுபடியும் திரேஸ்புரத்திற்கு வரத்தான் போகிறோம். இது ஒரு நாள் நிகழ்ச்சி அல்ல 365 நாட்களும் இந்த நிகழ்வு நடக்க இருக்கிறது. அடுத்து மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டில் அரசியல் குறித்து பேசுவேன் என்று கூறினார்.
முன்னதாக கன்னியாகுமரி கடற்கரை,மற்றும் உவரி கடற்கரையை சுத்தம் செய்த பின் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினம் கடற்கரையில் வி த லீடர் இயக்கத்தின் கொடியை அண்ணாமலை ஏற்றி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
nadunilai.com