ஒட்டப்பிடாரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க வேண்டும் - சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை

D.M.K

ஒட்டப்பிடாரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க வேண்டும் - சண்முகையா எம்.எல்.ஏ கோரிக்கை

ஒட்டப்பிடாரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க வேண்டும் என்று திமுக தேர்தல்  அறிக்கை தயாரிப்பு குழுவிடம் மேயர் ஜெகன் பெரியசாமி கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.  

தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் இடம்பெற வேண்டிய தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைக்கபட்டிருக்கிறது. இந்த குழுவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொழில் முனைவோர், தொழிற்சங்கத்தினர், உற்பத்தியாளர்கள், வணிகர்கள் ஆகியோர்களை சந்தித்து கருத்துக்களை கேட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கனிமொழி எம்.பி தலைமையிலான குழுவினர் தூத்துக்குடி வருகை தந்த போது பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை மனுக்களாக வழங்கினர். அவர்களிடம் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : தாமிரபரணியில் இருந்து வரும் வெள்ள உபரி நீரை ஒட்டப்பிடாரம் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் புதிய பாசன கால்வாய் அமைக்க வேண்டும், பேய்குளம்,குலையன்கரிசல் குளம், கோரம்பள்ளம் குளம் ஆகியவற்றின் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல்,வாழை விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. 

இதனை சரி செய்ய மருதூர் கீழக்காலில் இருந்து பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஸ்ரீ மூலக்கரை,பெருங்குளம்,சாயர்புரம் வழியாக வடகாலை இணைக்கும் விதமாக புதிய புறவழிபாசன கால்வாய் அமைக்க வேண்டும், சவலாப்பேரியை மையமாக வைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும், ஒட்டப்பிடாரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க வேண்டும், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மழை நீர் புகுந்து மக்கள் பாதிக்காத வகையில் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும், தருவைகுளத்தில் மீன் பிடித்துறைமுகம் அமைக்க வேண்டும், கீழ வல்லநாடு, எல்லைநாயக்கன்பட்டி,காரசேரி,சிங்கத்தாகுறிச்சி,வல்லநாடு ஆகிய ஊராட்சிகளை மையமாக வைத்து தொழிற்சாலை அமைத்து தரவேண்டும் என கூறியுள்ளார்.