அம்மா தண்ணீர் பாட்டில் விற்பனை நிறுத்தப்பட்டு ரொம்ப நாளாச்சு - இப்போது கண்டனம் தெரிவிக்கிறார் ஓ.பி.எஸ் பாசறை ஏசாதுரை

OPS

அம்மா தண்ணீர் பாட்டில் விற்பனை நிறுத்தப்பட்டு ரொம்ப நாளாச்சு - இப்போது கண்டனம் தெரிவிக்கிறார் ஓ.பி.எஸ் பாசறை ஏசாதுரை

தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் போது அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர் பாட்டில் என்று பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. பேருந்து நிலையங்கள் மற்றும் மருத்துவமனை அருகில் உள்ள அம்மா உணவகத்தை மக்கள் பெரிதும் பயன்படுத்தினர். அதேபோல் பேருந்து நிலையங்களில் அம்மா தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டது. இது வெளியூர் செல்லும் பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. திமுக ஆட்சி வந்தபிறகு இதில் சில திட்டங்கள் படிப்படையாக ஆட்டம் கண்டது. அம்மா உணவம் அங்கொன்றும் இங்கொன்றுமாக செயல்பட்டது, செயல்படுகிறது. அதுக்கு முன்பாகவே அம்மா தண்ணீர் விற்பனை நிறுத்தப்பட்டது. இது நடந்து ரொம்ப நாளாச்சு. பேருந்து நிலையங்களில் அரசு தண்ணீர் விற்பதையே மக்கள் மறந்துவிட்டனர். 

தற்போது வெயில் வாட்டி வதைப்பதற்கிடையில், அம்மா தண்ணீர் திட்டம் குறித்து நினைவிற்கு வந்திருக்கிறது தூத்துக்குடி மாநகர ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாளர் ஏசாதுரைக்கு. என்னது அம்மா தண்ணீர் பாட்டில் நிறுத்தப்பட்டதா என்று ஆச்சர்யமாக கேட்ட ஏசாதுரை, அதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, தொடர்ந்து பேருந்து நிலையங்களில் அம்மா தண்ணீர் பாட்டில் விற்பனையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். தவறும் பட்சத்தில் போராட்டத்தில் இறங்கிவிடுவோம் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.