பெண்களுக்காக மோடி தலைமையிலான பாஜக அரசு செய்தது என்ன? -பாஜக பிரமுகர் ஏ.அன்னபூர்ணா
Bjp

பெண்களுக்கா மோடி தலைமையிலான பாஜக அரசு என்னவெல்லாம் செய்தது என்று பாஜக பிரமுகர் ஏ.அன்னபூர்ணா விவரித்துள்ளவை :
பெண்கள் இல்லா வீடும், பெண்கள் முன்னேறாத நாடும் என்றுமே சிறக்காது... பெண் முன்னேற்றம் என்பதை இன்று தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி அதற்கு சாமரம் பேசும் கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் சரி மேடையில் பேசுவது என்று மட்டுமே புரிந்து கொண்டிருக்கின்றன. தமிழக மக்களையும் இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, நமது பாரத பிரதமர் மோடி, ”பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல், மனித குலத்தின் முன்னேற்றம் முழுமையடையாது என கூறினார். அன்று பெண் முன்னேற்றம் பற்றி பாஜக பேசலாமா, என்ன செய்தார் மோடி என்றெல்லாம் எதிர்கட்சிகள் கொக்கரித்தன ஆனால் இன்று பாரதம்தான் பெண் முன்னேற்றத்தில் முதன்மையான நாடு என்ற நிலையை அடைந்து சாதனை படைத்துள்ளது. இதுவரை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தேர்தலில் அலங்கார வாக்குறுதியாக இருந்ததை செயலில் காட்டியவர் விஷ்வர் குரு மோடி. கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிவிட்டு அவர் உதித்த வார்த்தைகள் இவை...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதில் பல தடைகள் இருந்தன. ஆனால், நோக்கம் சுத்தமாகவும் முயற்சிகள் வெளிப்படையாகவும் இருக்கும் போது அதன் முடிவுகள் தடைகளை தாண்டி செல்லும் என்பதை நாம் பார்த்தோம். கடந்த 21 மற்றும் 22ஆம் தேதிகளில் இந்தியா வரலாறு படைத்துள்ளது. இந்த இந்த வாய்ப்பை மக்கள் நமக்கு அளித்தது நமது அதிர்ஷ்டம். நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பெண்களின் பாதுகாப்பு, மரியாதை,செழிப்பு ஆகிவற்றுக்காக திட்டங்களை கொண்டு வந்து அவர்களை விடுவிக்க நமது அரசு அனைத்து முயற்சியும் எடுக்கிறது எனக் கூறி எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்தார்.
இப்படி வரலாற்று சாதனையை நிகழ்த்தியது மட்டுமல்ல பாஜக ஆட்சி பெண்கள் முன்னேற பல செயல் திட்டங்களை எடுத்து வடிவில் மட்டும் இல்லாமல் செயல் வடிவிலும் செய்து காட்டி சாதனை படைத்துள்ளது.
-பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் பெண்களால் 26.87 கோடி ஜென்டன் யோஜனா வங்கி கணக்குகள் கணக்கு துவங்கப்பட்டுள்ளன!
-பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சியில் 9.60 கோடி இலவச சமையல் காசு சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன!
-பிரதமர் மோடியின் பத்தாண்டு ஆட்சியில் பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்க 14.72 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டது மகத்தான சாதனை!
-பிரதமர் மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் 40 மில்லியன் புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன இவற்றில் 75% பெண்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது!
-பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் வங்கிகளில் 27 கோடி பெண்களுக்கு முத்ரா கடன் வழங்கப்பட்டுள்ளன மொத்தம் வழங்கப்பட்ட முத்ரா கடன் உதவி திட்டத்தில் 65% பயனாளிகள் பெண்களாக உள்ளனர்.
-பிரதமர் மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் பெண்கள் ராணுவத் துறையிலும் உயர் பதவிகளை பெற்று சிறப்பாக பணிவுடன் வருகின்றனர்!
இது மட்டுமில்லாமல் பெண்களுக்கான சம்பளத்துடன் கூடிய பிரசவ கால விடுப்பு பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் சுமார் ஆறு மாத காலமாக உயர்த்தப்பட்டுள்ளது. சந்திராயன் மூன்று திட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானிகள் முக்கிய பங்கு வகித்தனர். மோடி பதவியில் அமர்ந்த 2014 ஆம் ஆண்டு எல்பிஜி கேஸ் இணைப்பு 14.5 கோடி இருந்தது என்று 33 கோடி புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இப்படி பாரத வரலாற்றில் எந்த மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்த எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனையை செய்து காட்டி பெண்களை தகப்பன் சாணத்தில் இருந்து தூக்கி விட்டவர் நம் பிரதமர் மோடி.
இன்றைக்கு இதனை கட்சிகளில் அரசியல் கூட்டம் என்றால் கூட பெண்கள் அந்த அரசியல் கூட்டத்தின் நடுவே வர அஞ்சு நடுவில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் மட்டும் தான் பெண்களை பார்க்க முடியும் இது நிதர்சனமான உண்மை தமிழகத்தில் தற்காலத்தில் நடக்கும் எல்லா கட்சி அரசியல் நிகழ்ச்சிகளையும் பாருங்கள் பாஜகவின் அரசியல் நிகழ்ச்சி பாருங்கள் இந்த உண்மை உங்களுக்கே புரியும் எது பெண்களுக்கான கட்சி எது பெண்களை பாதுகாக்கும் கட்சி என!
இது எல்லாவற்றிற்கும் மேலாக தங்குகிற இடத்தில் வைரக்கல் வைத்து அலங்கரிப்பது போல நமது பாரதத்தின் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மோ என்கிற ஒரு பழங்குடியினத்தை சேர்ந்தவரை அமர வைத்து அழகு பார்த்த அந்த ஒரு தருணமே சொல்லும் பாஜக பெண்களுக்கான கட்சி என்பதை...
இன்று முதல் குடிமகனாக அமர்ந்து நமது பாரதத்திற்கு பெருமை சேர்த்த திரௌபதி அவர்கள் படித்த அதே கல்வி நிலையத்தில் படித்து வந்த நானும் பாஜகவை என் தாய் வீடு போல நினைத்து களமாடுவதை விட வேறு என்ன பெருமை இருக்க முடியும்?