நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பயின்றவர்கள் குடும்பக் கூடுகை!

nazareth

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., பயின்றவர்கள் குடும்பக் கூடுகை!

நாசரேத், ஜன. 31: நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளியில் 1969-70 இல் எஸ்.எஸ்.எல்.சி. பயின்றவர்களின் குடும்பக் கூடுகை எஸ்.ஏ.தாமஸ் கலையரங்கில் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமையில் நடைபெற்றது. சுமார் 35 பேர் தங்களது குடும்பத்துடன் கூடுகையில் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற குருவானவர் தேவராஜ் ஞானசிங்  ஆரம்ப ஜெபம் செய்து குடும்பக் கூடுகையை துவக்கி வைத் தார். ஸ்டீபன்  வரவேற்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற குருவானவர் தனசிங், தின கரன் போஸ், ஜெபசீலன், டாக்டர்.குமரகுருபரன், ராஜகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் கலந்து கொண்ட அனைவரும் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மறைந்த முன்னாள் மாணவர் டாக்டர் பன்னீருக்கு இரங்கல் பிரார்த்தனை  ஏறெடுக்கப்பட்டது. பள்ளி தாளாளர் சுதாகர்  கலந்து கொண்டு வாழ்த் துரை வழங்கினார். நிறைவு ஜெபம் செய்யப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது. கூட்ட ஏற்பாடுகளை பொன் ராஜ் ஒருங்கிணைப்பாளர் கள் கண்மனி, பொன்ரத்தி னம், பால்ராஜ், ராஜகுமார், ஆகியோர் செய்திருந்தனர்.