குளத்தூர் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - போலீஸ் விசாரணை

murder news

குளத்தூர் அருகே பிளஸ் 2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலை - போலீஸ் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் பகுதியை சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் மாணவி கடந்த இருநாட்களாக காணவில்லையாம். அவரது பெற்றோர் தேடிபார்த்துவிட்டு போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் தேடி வந்த நிலையில் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்த மாணவி உடலை இன்று போலீசார் மீட்டுள்ளனர்.

மாணவியின் உடலில் உள்ள காயங்களை வைத்து அவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.  இதற்கிடையே பிரேத பரிசோதனை செய்ய மாணவியின் உடலை போலீசார் எடுத்து செல்ல முயன்ற போது மாணவியின் உறவினர் மற்றும் ஊர் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தூத்துக்குடி மருத்துவகல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.