ஸ்டெர்லைட் உதவியுடன் கோவையில் தொழில் பயிற்சி முடித்த இளைஞர்களுக்கு ஸ்டெர்லைட்டில் பணி -சி.ஓ.ஓ உறுதி
sterlite news
தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் உதவியுடன் கோவையில் தொழில் பயிற்சி பெற்ற 100 இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. கல்வி,மருத்துவம் என சமூக மேம்பாட்டில் தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் கடலோர பகுதிகள் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் தொழில் பயிற்சி அளித்தது.
கடந்த 45நாட்கள் கோயம்புத்தூரில் உள்ள சி கே டி தொழிற்பயிற்சி மையத்தில் தூத்துக்குடி மாவட்டத்த்திலுள்ள 100 இளைஞர்கள் இந்த பயிற்சி பெற்றனர். ஏ சி மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமெண்டஷன், எலக்ட்ரிகல் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இளைஞர்களுக்கு வகுப்பறை படத்துடன் செயல்முறை பாடங்களும் கற்றுக் கொடுக்கப்பட்டன. அவர்களுக்கு தங்குமிடம், உணவுகள் இலவசமாக வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஊக்கத்தொகையும் ஸ்டெர்லைட் சார்பில் வழங்கப்பட்டன. படிப்புடன் விளையாட்டு மற்றும் பொழுது போக்க தேவையான ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டன.
இளைஞர்களிடம் பல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்த இந்த பயிற்சியில் தேர்வாணர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி பானு பிருந்தாவன் கோகுலம் அரங்கில் நடைபெற்றது. முதன்மை செயல் அலுவலர் சுமதி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் சமுதாய வளர்ச்சி பிரிவு தலைவர் சுந்தர்ராஜ் வரவேற்புரையாற்றினார். ஸ்டெர்லைட் முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கைலாசம், ஸ்டெர்லைட் தகவல் தொடர்பு தலைவர் திருமதி மீரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கோயம்புத்தூரில் ஜி கே டி தொழிற்பயிற்சி மைய இயக்குனர் நாகராஜன், தூத்துக்குடி தொழிலதிபர் டி. ஏ. தெய்வநாயகம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
சிறப்பு விருந்தினர் தொழிலதிபர் டி. ஏ. தெய்வநாயகம் பேசுகையில், தொழில் சாலைகள் வருவதால் தான் ஊரும், நாடும் முன்னேற்றம் அடையும். இந்த 45 நாட்கள் பயிற்சியின் மூலமாக வேலையை பெற்று பயனடையக்கூடிய இளைஞர்கள் தொடர்ந்து தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் நீங்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார்.
ஸ்டெர்லைட் முதன்மை இயக்க அலுவலர் சுமதி பேசுகையில், ஸ்டெர்லைட் நிறுவனம் இளைஞர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து திறன் மேம்படுத்தும் பல தொழில் பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன் மூலம் நீங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும். வரும் காலத்தில் மீண்டும் ஸ்டெர்லைட் நிறுவனம் திறக்கும் போது உங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கப்படும் என்றார்.
பயிற்சி பெற்று பயனடைந்த இளைஞர்கள் பேசுகையில், நாங்கள் ஊரில் மிகக் குறைந்த வருவாயில் கிடைத்த வேலை பார்த்து வந்தோம். ஆனால் இங்கு 45 நாட்கள் பெற்ற பயிற்சி எங்களை முற்றிலுமாக மாற்றி உள்ளது. எங்களாலும் முடியும், எங்களை இப்படியும் மேம்படுத்திக் கொள்ள முடியும். எங்கெல்லாம், எவ்வளவு வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இந்த பயிற்சி சிறப்பாக இருந்தது.பயிற்சியுடன் அதற்கேற்ற வேலைக்கு உத்தரவாதத்தையும் அளித்துள்ளனர் அது எங்களுக்கு மிகுந்த மன நிறைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த பயிற்சியை அளித்த ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நன்றி என தெரிவித்துக் கொண்டனர்.
சாமிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி,தெற்கு சிலுக்கன்பட்டி ஊராட்சி தலைவர் பாலசுப்பிரமணியம் ராஜாவின் கோவில் தலைவர் அன்புராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் இசக்கிராஜா உள்ளிட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பெல் தொண்டு நிறுவன இயக்குனர் ப்யூலா, தாயகம் தொண்டு நிறுவன இயக்குனர் ஜெயகனி, துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி,டிசாஸ்டர் மேலாண்மை தொண்டு நிறுவன இயக்குனர் தாமோதரன்,ஏபுள் பவுண்டேஷன் இயக்குனர் சுபர்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.