தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல 20-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை விழா!
CSI : Thoothukudi - Nazareth
நாசரேத்,அக்.25:தென்னிந்திய திருச்சபை, தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல 20-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகை நடைபெற்றது. இதில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பேராயர்கள் தீமோத்தேயு ரவீந்தர், ஜெய சிங் பிரின்ஸ் பிரபாகரன் ஆகியோர் வழங்கினர்.
தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல 20-வது ஆண்டு ஸ்தோத்திரப்பண்டிகையை முன்னிட்டு கடந்த 01 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஞாயிறு ஆராதனையில் திருச்சபை குடும்பங்களின் ஒரு நாள் வருமான காணிக்கை அந்தந்த ஆலயங்களில் படைத்தல் நடைபெற்றது.
கடந்த 03 ஆம் தேதி செவ்வாய்கிழமை திருமண்டல் நிறுவனங்களின் ஊழி யர்கள் ஒருநாள் வருமான காணிக்கைப் படைத்தல் நடைபெற்றது. கடந்த 10 ஆம்தேதி செவ்வாய்கிழமை அன்று மிஷனெரிகளை நினைவு கூரும் பவனி தூத்துக்குடி டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயம் முன்பு ருந்துபுறப்பட்டு திருமண்ட ல வளர்ச்சிக்கு பாடுபட்டு உயிர் நீத்த மிஷனரிகளு க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
கடந்த 14 ஆம் தேதி சனிக்கிழமை தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திறன் காண் போட்டிகளும், கடந்த 21 ஆம் தேதி சனிக்கிழமை மாலை யில் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து பவனி புறப்பட்டு சண்முகபுரம் தூய பேதுரு ஆலயம் வரை பவனி சென்றடைந்தது. மாலையில் சண்முகபுரம் தூய பேதுரு ஆலய வளா கத்தில் கொடி ஏற்றம் நடை பெற்றது.முடிவில் திருச் சபை கலைநிகழ்ச்சிகள் சண்முகபுரம் தூய பேதுரு ஆலய வளாகத்தில் நடை பெற்றது.கடந்த 23 ஆம் தேதி திங்கள்கிழமை சாயர்புரம் போப் கல்லூரி விளையாட்டு மைதானத் தில் குருமார் விளையாட் டுப் போட்டிகள் நடைபெற் றது.24 ஆம்தேதி செவ்வாய் கிழமை மாலையில் நாச ரேத் தூய யோவான் பேரா லயவளாகத்தில் திருச்சபை யின் சார்பில் கலை நிகழ்ச் சிகள் நடைபெற்றது.
புதன்கிழமையான இன்று காலை 8.30 மணிக்கு நாசரேத் தூய யோவான் பேரா லயத்தில் ஸ்தோத்திரப் பண்டிகை மற்றும் திருவிரு ந்து ஆராதனை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் பொறுப்பும் பிரதம பேராயரின் ஆணையாளரு மான பேராயர் தீமோத்தேயு ரவீந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆரா தனையில் மதுரை- இராம நாதபுரம் திருமண்டல பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தேவ செய்தி கொடுத்தார். காலை 11 மணிக்கு வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. கூட் டத்திற்கு பிரதமப்பேராய ரின் ஆணையாளர் தீமோத் தேயுரவீந்தர் தலைமை வகி த்தார்.திருமண்டல உபத லைவர் தமிழ்செல்வன், லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னி லை வகித்தனர்.குருத்துவ செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக் வரவேற்றுப் பேசினார். விழாவில் 172 பேர்களுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பேராயர்கள் தீமோத்தேயுரவீந்தர், ஜெய சிங் பிரின்ஸ் பிரபாகரன் மற்றும் திருமண்டல நிர்வா கிகள் வழங்கினர். மேலும் பல்வேறு வேத-வினா போட் டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்கள் வழங் கப்பட்டது.
விழாவில் நாசரேத் தூய யோவான் பேராலய தலை மைப் பாதிரியார் ஹென்றி ஜீவானந்தம், உதவி குரு பொன்செல்வின் அசோக் குமார், திருமண்டல சபை மன்ற தலைவர்கள் வெல்ற் றன் ஜோசப், அகஸ்டின் கோயில்ராஜ், டேனியல் எட்வின், திருமண்டல தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரி தாளாளர் ஜெயக்குமார் ரூபன், முதல்வர் டாக்டர் ஜெயக்குமார், சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், நாசரேத் கைத்தொழில் பாடசாலை முதல்வர் ஸ்டீபன் மற்றும் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்திலுள்ள திருச்சபை மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பேராயர் பொறுப்பும் பிரதம பேராயரின் ஆணையாளரு மான பேராயர் தீமோத்தேயு ரவீந்தர் தலைமையில் திருமண்டல உபதலைவர் தமிழ்ச்செல்வன், லே செய லாளர் நிகர் பிரின்ஸ் கிப்ட் சன்,குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.