குலசை தசரா விழாவில் ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் 60 ஆயிரம் பாட்டில் குடிநீர் விநியோகம்.!
kulasai Mutharamman kovil - sterlite
குலசேகரபட்டணம் தசரா விழாவிற்கு சென்ற பக்தர்களுக்கு 60ஆயிரம் குடிநீர் பாட்டில்களை ஸ்டெர்லைட் நிறுவனம் வழங்கியது. இதற்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.
நாட்டில் மைசூருக்கு அடுத்தபடியாக திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடைபெறும் இந்த தசரா விழாவில் பத்தாம் திருநாளில் முக்கியமான நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
முத்தாரம்மனிடம் பல்வேறு வேண்டுதலுக்காக விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் சூரசம்காரத்தை கண்டு அம்மன் அருள் பெறுவதற்காக கோவிலுக்கு வந்தனர். அம்மனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் தாகத்தை போக்க தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் 60ஆயிரம் தண்ணீர் பாட்டில்களை விநியோகம் செய்தது. குலசேகரபட்டிணம் புறநகர் சாலையில் இருந்து இந்த தண்ணீர் பாட்டில்கள் விநியோகத்தை ஸ்டெர்லைட் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் திருமதி ஏ. சுமதி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து ஸ்டெர்லைட் காப்பர் தலைமை மருத்துவர் அலுவலர் டாக்டர். கைலாசம், சட்டப்பிரிவு தலைவர் நீரஜ், நிர்வாகப் பிரிவு தலைவர் திருமதி. ஜெயா, வர்த்தக பிரிவு அலுவலர் அருணாச்சலம், நிதிப் பிரிவு அலுவலர் கார்த்தீஸ்வரன், தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்க தலைவர் தியாகராஜன், செயலாளர் நுகர்வோர் பேரவை சங்கம் கல்லை ஜிந்தா, நுகர்வோர் பேரவை துணைசெயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து கோவிலுக்கு சென்ற பக்தர்களுக்கு பாட்டில் குடிநீர் விநியோகம் செய்தனர்.
இதனை பெற்று கொண்ட பக்தர்கள் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.