புதுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் தாம்போதி பாலத்தில் முட்டி மோதி படுகாயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர்
Accident
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே தாம்போதியில் புதிதாக பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்கின்றனர். ஒவ்வொரு மழை காலங்களிலும் காட்டு வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படும் தாம்போதியை கடக்கும்போதும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது கட்டப்படும் பாலத்தின் மூலம் அத்தகைய குறைகள் தவிர்க்கப்படுகிறது. தற்போது அப்பாலத்தின் வேலை நடைபெறுவதால், ஒரு புறமாக பாதை தயார் செய்து அதில் வாகனங்களை செல்லும்படி செய்திருக்கிறார்கள். அதில்தான் வாகனங்கள் அனைத்தும் சென்று வருகிறது. அவ்வாறு சென்றுவரும் வாகனங்களில் சிலவைகள் பாலம் கட்டப்படும் பகுதிக்குள் நேரடியாக பாய்ந்துவிடும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இப்பகுதி இருட்டு பகுதியாக இருப்பதாலும், அங்கு பாலம் வேலை நடைபெறுகிறது என்பதை காட்டும் ரிப்லெக்டர் போதிய அளவில் இல்லை என்பதாலும் இருட்டில் வரும் சில வாகங்கள் ஓரமாக உள்ள பாதைக்கு செல்ல வேண்டும் என்பது தெரியாமல் நேரடியாக வேலை நடைபெறும் பாலத்தின் மீதே பாய்ந்து விடுகிறது. இதில் குடிபோதையில் வருவோர் தவிர மற்றவர்களும் தடுமாறும் சூழ்நிலை இருக்கிறது. நேற்று (30.05.2024) இரவு சிப்காட் போலீஸ் ஸ்டேசனின் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் அவ்வாறு தள்ளாடி பாலத்துக்குள் பாய்ந்து காயமடைந்தார். அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
எனவே பாலம் நடைபெறும் பாலத்தின் இருபுறமும் அறிவிப்புகள் வெளியில் தெரியும்படி அதிக அளவில் ரிப்லெக்டர் வசதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.