பாகன் உதயகுமார் குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய வேண்டும்

Thiruchendur

பாகன் உதயகுமார் குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய வேண்டும்

திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தருவோம் என்று அமைச்சர் கூறியுள்ளார். அதை வரவேற்கும் அதேவேளை அந்த குடும்பத்திற்கு எதாவது ஒரு நிதி உதவியும் செய்தால் தான் சரியாக இருக்கும். இந்த சம்பவம் ஒரு விபத்து.  எனவே விபத்து ஏற்பட்டால் அரசு  எத்தகைய உதவி செய்யுமோ அதனை செய்ய வேண்டும். பக்தர்களின் பணத்தில் இருந்து அதாவது அறநிலையத்துறையில் இருந்து எடுத்து வழங்கலாம்.

யானை பாகன் பணி சாதாரண பணி அல்ல. காட்டு விலங்கையும் கையாள முடியும். அதற்கும் மனிதனோடு தொடர்பில் இருக்கும் மனநிலை இருக்கிறது என்பதை ஆதாரப்படுத்தும் பணி. தவறுதலாக கொன்றுவிட்டோமே என்று யானை தெய்வானை இடிந்துபோய் உற்கார்ந்திருந்ததை பார்க்க முடிந்தது. அதற்கும் அன்பு செலுத்தும் குணம் இருக்கிறது.

இதுக்கிடையே காட்டில் வளரக்கூடிய விலங்கான யானையை காட்டில் விடுவதுதானே சரி என்று சிலர் வாதிடுகின்றனர். அவர்களின் மனிதாபிமானம் வரவேற்க தக்கதுதான் என்றாலும், ஆயிரக்கணக்கான காட்டு யானைகளில் சில யானைகள் மட்டும்தான்  மனிதனோடு இருக்கிறது. அதன் மூலமே அந்த மிருகத்தின் குணத்தையும் பார்க்க முடிகிறது. பக்தர்களுக்கு ஆசி வழங்கும் அளவிற்கு மனிதனோடு பழகும் தன்மை கொண்டதை நாம் அறிகிறோம். இதன் மூலமே விலங்கிற்கும், மனிதனுக்கும் உள்ள இடைவெளி குறைகிறது. விலங்குகள் பொதுவாக எதிரானதை எதிரியாக பார்க்கிறது. எதிரியாக பார்க்காததைவிட்டு விலகி செல்கிறது. அதுவே நண்பர் ஆகிவிட்டால் அதைப்பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். நம்மைப்பற்றி அது அறிந்து கொள்கிறது. விலங்குகள் மனிதனோடு கொஞ்சி விளையாடுவதை பார்க்கும் மற்ற மனிதனிடமிருந்து அது குறித்த அச்சங்கள் போகிறது. விலங்குகள் குறித்த அச்சம் இல்லை என்பதால்தான் அந்த விலங்குகள் பாதுகாப்பாக இருக்க முடிகிறது. இந்தநிலை இப்போது இல்லை,. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதனோடு யானைகள் இணைந்து செயல்பட்ட  வரலாறுகளை நாம் கேட்கிறோம். அதில் ஒன்றிரண்டு இறை பணிகள் மூலம் மட்டுமே தற்போது நம்மோடு இருக்கிறது. எனவே அதை கோயில்களில் வைத்திருப்பதில் தவறில்லை. யானையை கையாள்வதில் யானைக்கும், மக்களுக்கும் பாதிப்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான்.

ஆர்.எஸ்.சரவணப்பெருமாள், 8056585872