மத்தியரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கிறது - வானதிசீனிவாசன் அட்டாக்

Vaanathiseenivasan

மத்தியரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கிறது - வானதிசீனிவாசன் அட்டாக்

மத்தியரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழக அரசு புறக்கணிக்கிறது என்று பாஜக சட்ட மன்ற உறுப்பினர் வானதிசீனிவாசன் குற்றம்சாட்டினார். சற்று முன் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர், டெய்லரின்,சலூன்,தட்சுத் தொழில் உள்ளிட்ட பல்வேறு கைவினைஞர்களின் நலனுக்காக மத்திய அரசு விஸ்வகர்மா திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. அந்த திட்டத்தின் மூலம் இது போன்ற வேலைகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும், பயிற்சி காலத்தில் அவர்களுக்கு தினசரி ரூ.500 வழங்கப்படும் என்றும், மேலும் அவர்களுக்கு உபகரணங்கள் வாங்க ரூ.15,000 வழங்கப்படும் என்றும், அவர்கள் தொழில் முதலீடு செய்ய ரூ.50 ஆயிரத்தில் இருந்து மேலே கேட்கும் கடன் வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த திட்டத்தை மாநில அரசுகள் அரசிதழில் ஏற்றவேண்டும். ஆனால் தமிழக அரசு இதுவரை அரசிதழில் ஏற்றவில்லை. மத்திய அரசு திட்டம் மாநில மக்களிடம் சென்றடைந்துவிட கூடாது என்கிற காழ்புணர்ச்சியில் இப்படி செய்கிறார்கள். ஆன்லைன் மூலம் இந்த திட்டத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை. 

வரும் 17ம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி நாளாகும். அன்றைய தினம் இந்த திட்டத்தை அரசிதழில் ஏற்ற வேண்டும் என்றும், இதன் மூலம் மக்கள் பயனடைய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். சிலர் இது குலத்தொழில் சிஸ்டம் என்பதுபோல் பேசுகிறார்கள். விஸ்வகர்மா என்பது கைவினைஞர்கள் என்பதைத்தான் குறிக்கிறது. இதில் தட்சு வேலை மட்டுமில்லை, டெய்லரின், சலூன் என நிறைய வேலைகள் உள்ளது. இந்த வேலையை இவர்தான் செய்கிறார்கள் என்பதெல்லாம் இப்போது கிடையாது. மத்திய அரசின் மூலம் சாதாரண மக்கள் பயன்பெற்றுவிட கூடாது என்பதற்காக சிலர் வேண்டுமென்றே ஏதேதோ சொல்கிறார்கள். அதனை மக்கள் நம்பமாட்டார்கள். அனைத்து வகையான மக்கள் பயன்பாட்டிற்கே அத்தனை திட்டங்களும் கொண்டுவரப்படுகிறது என்றார்.