தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவராக எஸ்.பி.வாரியர் தேர்வு.!
BAR Association election

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க தலைவராக எஸ்.பி.வாரியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் தேர்தல் பரபரப்பாக நடைபெற்றது. மொத்தமுள்ள 780 வாக்குகளில் 704 வாக்குகள் பதிவாகின. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எஸ்.பி.வாரியர் 534 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். செயலாளராக செல்வின், பொருளாளராக கணேசன், உதவி தலைவராக சிவசங்கர், இணைச்செயலாளராக பாலகுமார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களாக அரிமுருகன், சார்லஸ், மணிகண்டன், முனீஸ்குமார், ராஜ்குமார், ரமேஷ் செல்வகுமார், விக்னேஷ், முருகன், பிரவின் குமார், ஸ்ரீநாத் ஆனந்த், தமிழ்ச்செல்வி,யூஜியானா,உஷா,ரெக்ஸ் அண்டோ ரொஷில்டா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் அலுவலர்களாக வழக்கறிஞர்கள் ஸ்டீபன் அந்தோணிராஜ், ராஜசேகர் சுப்பையா, பிள்ளைநாயகம் ஆகியோர் செயல்பட்டனர்.