2024 ஆம் ஆண்டிலும் வேகமாக வளரும் பொருளாதார நாடு இந்தியா : ஐநா அறிக்கை
india
2024 ஆம் ஆண்டிலும் வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா திகழும் என ஐநா பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியான அந்த அறிக்கை : 2024 நாளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும். இதுவே 2023 ஆம் ஆண்டு 6.3 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டில் உள்நாட்டு சேவை உற்பத்தி மற்றும் சேவை துறைகளின் வளர்ச்சி காரணமாக இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும். 2024லும் வேகமாக வளரும். பொருளாதார அரசின் உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் உந்தப்பட்டு 2023 இந்தியா வலுவான முதலீடை பெற்றது.
வளர்ந்த நாடுகளை காட்டிலும், வளரும் நாடுகளில் முதலில் இருந்து சிறப்பானதாக இருந்தது. 2023 -ல் தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் முதலீடு வலுவாக இருந்தது. இவ்வாறு ஐநாவின் பொருளாளர் ஆய்வறிக்கையை கூறப்பட்டுள்ளது.