பெங்களுரில் இருந்து தூத்துக்குடிக்கு வரும் 10ம் தேதி பொங்கல் சிறப்பு ரயில் இயக்கம்!
Train News
பொங்கல் பண்டிகையொட்டி சங்கராந்தி சிறப்பு ரயில்கள் வரும் 10ம்தேதி பெங்களூரு - மைசூருக்கும் இயக்கப்படுலதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு குடும்பத்துடன் வந்து கொண்டாடிவிட்டு செல்வது வழக்கம். சமீபகாலமாக மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கு தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே, பொங்கல் பண்டிகையொட்டி சங்கராந்தி சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. பெங்கள்ஊரு - தூத்துக்குடிக்கு சிறப்பு ரயிவ் (வண்டி எண்: 06569) நாளை மறுநாள் (10ம்தேதி)வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை,சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கவல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேசன்களின் நின்று 11ம்தேதி காலை 11:00 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். அதுபோல், தூத்துக்குடியில் இருந்து தூத்துக்குடி -மைசூருக்கு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06570) 11ம் தேதி சனிக்கிழமை மதியம் 1:00 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயில், கோவில்பட்டி , சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல். கரூர், நாமக்கல், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூர்,மாண்டியா மற்றும் எளியூர் ஆகிய ரயில்வே ஸ்டேசன்களில் நின்று 12ம்தேதி காலை 6:30 மணிக்கு மைசூர் சென்றடையும். இதில், பெங்களூர் டூ தூத்துக்குடி சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (8ம் தேதி) துவங்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் கூறுகையில்,’தை பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம். அதேபோல், சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்’என்று கோரிக்கை வைத்தார்.