ஜல்லி போட்டு ரொம்ப நாளாச்சு, சாலை வேலை எப்போ முடியும்? - கேட்கிறார்கள் கூட்டாம்புளி மக்கள்

thoothukudi union

ஜல்லி போட்டு ரொம்ப நாளாச்சு, சாலை வேலை எப்போ முடியும்? - கேட்கிறார்கள் கூட்டாம்புளி மக்கள்

எந்த ஒரு ஆபரேசனையும் ஆரம்பித்த பிறகு உடனே முடிப்பதுதானே நல்லது?. காலதாமதம் செய்வதோ,இடையில் நிறுத்துவதோ அவதியை ஏற்படுத்தும்தானே?. அப்படித்தான் கூட்டாம்புளி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலை சீரமைப்பிற்காக போடப்பட்ட ஜல்லி, வெகுநாட்களாக அப்படியே கிடப்பதுதான் அந்த அவதிக்கு காரணம்.  

தூத்துக்குடி யூனியன் குமாரகிரி பஞ்சாயத்துக்குட்பட்ட கூட்டாம்புளி - சிறுப்பாடு சாலை சீரமைக்கும் பணி கடந்த பல நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. அதற்காக கூட்டாம்புளி சுடுகாடு பகுதியில் உள்ள ரோட்டில் ஜல்லி விரிக்கப்பட்டது. தொடர்ந்து அடுத்தக்கட்டத்திற்கு போகாமல் ஜல்லி அப்படியே கிடப்பதால் அச்சாலையில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வேலைகள் நடந்துள்ளது. அதுவும் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது என்பதால் அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் தினந்தோறு கஷ்டத்தை அனுபவித்து வருகின்றனர். 

எனவே அதிகாரிகள் தலையிட்டு சாலை சீரமைப்பு பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டாம்புளி - சிறுப்பாடு பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.