தூத்துக்குடி ராஜாஜி பார்க்கில் நடக்கிறது இளசுகளின் சில்மிஷ அட்டகாசம் - தடுக்க வேண்டும் காவல்துறை
Thoothukudi news
இருக்க இடம் கொடுத்தால், படுக்க பாய் கேட்பாங்க என்று கிராமங்களில் சொல்வார்கள். சாதாரணமாக நினைத்து விட்டுவிடும் காரியங்கள் நாளடைவில், தவிர்க்க முடியாத காரியமாகிவிடும் என்பதற்காகவும் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். அப்படித்தான் ஆகிபோயுள்ளது தூத்துக்குடி ராஜாஜி பார்க்கில் இளசுகளின் அட்டகாசங்கள். எதோ வெயிலுக்கு ஒதுங்கியிருக்கிறார்கள் என்று நினைத்தால், அங்கு ஆண், பெண் என இரண்டுபேரும் சேர்ந்து செய்யும் சில்மிஷ அட்டகாங்கள் மிகவும் மோஷம் என்கிறார்கள் அங்கு வந்து செல்வோர். அதற்காக பார்க்கிற்கு வரும் அனைவரையும் அப்படி சொல்லவில்லை. சிலர்தான் இப்படி செய்கிறார்கள், அதுதான் பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது.
நடைபாதையில் ஆட்கள் செல்கிறார்களே என்று கூட பார்க்காமல் அங்கு ஓரமாக உட்காரும் ஆண், பெண் இருவரும் ஒட்டி, உரசி சில்மிஷம் செய்து மகிழ்கிறார்கள். இதனை பார்க்கும் பொதுமக்கள் இது தூத்துக்குடி ராஜாஜி பார்க்கா வேறு எங்கோ உள்ள பார்க்கா என்று கேள்வி கேட்கிறார்கள். பூங்காவிற்குள் பல தரப்பினரும் வந்து செல்கின்றனர். நிறைய மாணவர்கள் இங்கு வந்து படிக்கிறார்கள். அப்படிப்பட்ட இடத்தில் இருந்து சில்மிஷம் செய்து கொள்வது பொதுமக்களுக்கு இடையூறு செய்வது என்றுதானே அர்த்தம்?.இதை அப்படியே விட்டால், தூத்துக்குடி இளைஞர்கள் பலர் கெட்டுப்போகும் சூழ்நிலை உள்ளது. எனவே மாநகராட்சி எல்லையில் உள்ள இந்த பூங்காவிற்கு போலீஸ் சிறப்பு கண்காணிப்பு அவசியமாகும். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சில்மிஷத்தில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.