தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் தேசியக்கொடி ஏந்தி யோகாசனம்

National News

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் தேசியக்கொடி ஏந்தி  யோகாசனம்

பாரத நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர் தேசியக்கொடி ஏந்தி  யோகாசனம் செய்து உலக சாதனை நிகழ்த்தி காட்டினர்.

நாட்டின் 78 வது சுதந்திர தினம் எழுச்சியோடு கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். இளம் வயதிலேயே மாணவர்களிடம் தேசப்பற்றை அதிகரிக்க செய்யும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியை ஹே பத்மா தலைமையில்,வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி, தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ரெஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவியர்கள் தங்களது இரண்டு கைகளிலும் தேசிய கொடியை கையில் ஏந்தியவாறு 78 வினாடிகள் பத்மாசனத்தில் அமர்ந்திருந்து தேசிய கொடியை பறக்க பறக்கவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாணவர்கள் அனைவரும் ஒன்றாக தேசிய கொடியை பறக்க விட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலக் கூடிய இந்த மாணவர்கள்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து நாட்டுப்பற்று  பாடல்கள் இசைக்கப்பட்டன. இதேபோல் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பள்ளிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.