கோயமுத்தூர் - அவினாசி மேம்பாலமத்தில் கேஸ் எரிவாயு லாரி கவிழ்ந்து விபத்து
kovai - avinaasi

கொச்சினிலிருந்து இன்று(3.1.2025)எரிவாயு ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி ஒன்று அவினாசி மேம்பாலம் அருகே வந்த போது எஞ்ஜினுக்கும் எரிவாயு இருந்த கண்டெய்னருக்கும் இடையே உள்ள ராடு தூண்படிக்கப்பட்டதால் கண்டெய்னர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் அதிஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த கண்டெய்னர். 20 மெட்ரிக் டன் எடை கொண்டது.
விபத்து நடந்த உடனே லாரியை ஓட்டி வந்த டிரைவர் காவல் துறைக்கும் பாரத் கேஸ் ஏஜென்ஸிக்கும் உடனே தகவல் தெரிவித்தார். மேலும் மேம்பாலம் என்பதால் மின் இணைப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. காவல் துறையின் துரித நடவடிக்கையால் பாலத்தின் அடியில் இருந்த பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டது.
மேலும் அனைத்து வழி பாதைகளும் சந்திக்கும் இடம் என்பதால் அனைத்து பாதைகளிலும் பேரிகார்டு வைத்து தடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் யாரும் வேடிக்கை பார்க்க உள்ளே வர முடியாதவாறு காவல்துறையால் கண்காணிக்கப் பட்டுள்ளது. மேலும் கண்டெய்னர் ஒரே ஒரு பகுதியில் மட்டும் எரிவாயு கசிவு உள்ளதால் அதை தண்ணீர் பீய்ச்சு அடித்து கேஸ் வெளியே வரும்போது அதன் அடர்த்தி குறைய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக தனியார் தண்ணி லாரிகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பாலத்தின் அடியில் பெரிய பெரிய வணிக வளாகங்கள் உள்ளதாலும் மற்றும் எரிவாயு காற்றில் கலப்பதாலும் இதன் மூலம் மாசு ஏற்படுவதை தவிர்க்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.