தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி அருகே புதிய பூங்கா - மேயர் ஜெகன் பெரியசாமி ஏற்பாடு
N.P.Jegan

தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி அருகே புதிய பூங்கா பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக மழை நீர் வடிகால், பாதாளசாக்கடை, சாலைகள் அமைத்தல், பூங்காக்கள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி பகுதியில் நடைபெற்று வரும் புதிய பூங்கா அமைக்கும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். இந்தப் பூங்காவில் நடைபயிற்சி மட்டுமல்லாது புதிய முயற்சியாக அந்தப் பகுதியிலுள்ள மாநகர மக்கள் தங்களது ஓய்வு நேரத்தில் இங்கு வந்து தனது நண்பர்கள், உறவினர்களுடன் அமர்ந்து பேசக்கூடிய வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், சுகாதார அலுவலர் ராஜசேகர், போல்பேட்டை பகுதி திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பா் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.