சிறுப்பாட்டில் கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாமை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
Minister News

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சிறுப்பாட்டில் கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாமை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் சார்பில் கால் மற்றும் வாய் நோய்களுக்கு 6வது சுற்று தடுப்பூசி முகாம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறுப்பாடு கிராமத்தில் நடைபெற்றது. விழாவில் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அதிகாரிகளிடம் மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மாத்திரை மருந்துகளை முறையாக வழங்கிட வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
விழாவில் சண்முகையா எம்எல்ஏ, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பானு, ஹைகோர்ட் மகாராஜா, கால்நடை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) செல்வக்குமார், துணை இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) ஆண்டனி இக்னேஷியஸ் சுரேஷ், உதவி இயக்குநர் வேல்மாணிக்கவள்ளி, தலைமை மருத்துவர் ஜோசப் ராஜ், உதவி மருத்துவர் ஆனந்தராஜ், மருத்துவர்கள் பிரபாகர், சரண்யா, பெரியசாமி, விக்னேஷ், கணேசன், ரவிக்குமார், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரி சங்கர், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, துணைசெயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் செல்வக்குமார், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, சிறுபான்மை அணி தலைவர் ராஜா ஸ்டாலின், மாவட்ட பிரதிநிதி வெயில்ராஜ், அவைத்தலைவர் பாலசுந்தரம், மாநில பேச்சாளர் சண்முகம் நாராயணன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சைமன், தொழிலாளரணி மொபட் ராஜன், தகவல் தொழில்நுட்ப அணி மணிகண்டன், வழக்கறிஞரணி மணிகண்டன், கிளைசெயலாளர்கள் சஞ்சிவ்குமார், முருகன், சீனிவாசபிள்ளை, கல்லாத்தான், செல்வம், நெடுஞ்செழியன், ஸ்டாலின், அன்பு, அருள் ஜெயபாலன், மகளிரணி மஞ்சுளா, அபயம்தீர்த்தான், சண்முகம், வக்கீல்கள் கிருபாகரன், பூங்குமார், மற்றும் கபடி கந்தன், கப்பிக்குளம் பாபு, ஜெயமணி, ஜெயக்குமார் உள்பட அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்,