நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கான முகாம் - ஜூலை 2 முதல் 9ம் தேதிகள் வரை நடக்கிறது

news news

நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கான முகாம் - ஜூலை 2 முதல் 9ம் தேதிகள் வரை நடக்கிறது

நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்வதற்கான முகாம் - ஜூலை 2 முதல் 9ம் தேதிகள் வரை நடக்கிறது  

கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் புதிதாக உறுப்பினர்களை பதிவு செய்வதற்கான முகாம்  ஜூலை 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை தாலுகா வாரியாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட சமூகபாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : 

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள், சமூகபாதுகாப்பு நலவாரியம் உள்பட 18 வகையான நலவாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு வகையான கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட, 60 வயதுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் பதிவு செய்தால் அவர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் https://tnuwwb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் பதிவை புதுப்பிக்க வேண்டும்.

தமிழ்நாடுகட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவர்களுக்கு திருமணம்,மகப்பேறு, குழந்தைகளுக்கு கல்வி நிதியுதவி, கண்ணாடி மற்றும் நியமனதாரர்களுக்கு இயற்கை மரணம், விபத்து மரணஉதவித் தொகை மற்றும் 60 வயது நிறைவு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் புதிதாக உறுப்பினர்களை பதிவு செய்வதற்கு தூத்துக்குடி தொழிலாளர் உதவிஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி வருகிற 2-ந் தேதி ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் பஸ்நிலையம் அருகில் உள்ள ரைஸ் மில் மண்டபத்திலும், 3-ந் தேதி தூத்துக்குடி தாலுகா  சேர்வைக்காரன் மடம் இ-சேவை மையத்திலும்,  4-ந் தேதி கருங்குளம் தாலுகா புளியங்குளத்திலும், 5-ந் தேதி சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சி இ-சேவை மையத்திம், 9-ந் தேதி ஆழ்வார்திருநகரி தாலுகா வெள்ளமடம் இ-சேவை மையத்திலும் சிறப்பு பதிவு முகாம் நடக்கிறது.

இந்த முகாமில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண், ஆதார்அட்டை, ரேஷன்கார்டு, பிறந்த தேதிக்கான ஆவணம் (பள்ளிசான்று, பிறப்புசான்று, ரேஷன் கார்டு, ஓட்டுநர்உரிமம்), தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போட் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு நவீன் 99401 71936, அருண்மாரியப்பன் 80568 61224 ஆகியோரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.