நடைபாதைகளில் ஆக்கிரமிப்புக்கள் - நடவடிக்கை எடுக்குமா தூத்துக்குடி மாநகராட்சி?

Thoothukudi city

நடைபாதைகளில் ஆக்கிரமிப்புக்கள் - நடவடிக்கை எடுக்குமா தூத்துக்குடி மாநகராட்சி?

மக்கள் செளகரியமாக வாழ்வதற்கு தரம்வாய்ந்த இருப்பிடங்களை வலியுறுத்துகிறது அரசு நிர்வாகங்கள். அற்காக, அழகு நிறைந்த வாழிடங்களை உறுதிபடுத்தும் வகையில் ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் அடிப்படை கட்டமைப்புகளை கொண்ட மாநகரங்கள் உருவாக்கப்படுகிறது. சாலை, குடிநீர்,வடிகால்,போக்குவரத்து என்று அடிப்படை வசதிகளுடன் பூங்காக்கள், கடற்கரை அழகுபடுத்துதல், கட்டிடங்கள் மீது சித்திரம் என்று அழகு நிறைந்த மாநகரம் அமைய வேண்டும் என்று அரசு நினைக்கிறது. ஆனால் பொதுமக்களில் பலர் அப்படி நினைப்பது போல் தெரியவில்லை. பொது இடங்களை ஆக்கிரமிப்பது தவறு என்பதை அவர்கள் மறந்துவிட்டதாகவே தெரிகிறது. 

நெருக்கடி மிகுந்த சாலைகளில் நடைபாதைகள் மிகவும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட எல்லையை தாண்டி வாகனங்கள் வரமுடியாத வகையில் அது அமைக்கப்படுவதால் சாலையோரம் நடந்து செல்வோர் அதனை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். இப்படி முக்கியம்வாய்ந்த நடைபாதைகளை சிறுவியாரிகள் சில நேரங்களில் ஆக்கிரமித்துவிடுகின்றனர். எதாவது போதையில் இருப்போர் நடை பாதையை மறைத்து இருசக்கரவாகனங்களை நிறுத்தி வைத்திருப்பதை பார்த்தால் அது தவறு என்று வாதிடுகிறோம். அதேபோல் நல்ல நிலையில் உள்ளவர்களும் பொதுமக்களின் நலனை பற்றி யோசிக்காமல் நடைபாதையை ஆக்கிரமித்து அதில் பொருட்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர். இதில் சாதாரண சிறு வியாபாரிகள் மட்டுமில்லை, பெரிய கடைகளின் பொருட்கள் கூட நடைபாதையை மறைத்துக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது. ஏற்கனவே மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் திட்டத்தை வைத்துள்ளது. ஆனாலும் முக்கிய இடங்களில் இது தொடர்கிறது. ஆக்கிரமிப்புகளை தனிமனிதன் யாரும் தட்டிகேட்க முடிவதில்லை. இதையெல்லாம் பார்க்கும் பொதுமக்கள், நடைபாதையில் செல்வோர் குமுறுகிறார்கள். 

தூத்துக்குடி மாநகர பகுதியில் பல பகுதியில் இதுபோன்று நடைபாதைகள் ஆக்கிரமிக்கபட்டுள்ளது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் நினைக்குமானால் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அனைத்தியும் உடனே அகற்ற வேண்டும். அதேபோல் பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.