புதுவாழ்வு சங்கம் சார்பில் கச்சனாவிளை பள்ளியில் குடிநீர் தொட்டி - மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்

Nazareth news

புதுவாழ்வு சங்கம் சார்பில் கச்சனாவிளை பள்ளியில் குடிநீர் தொட்டி - மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார்

நாசரேத், நவ.8- நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் புதிய குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது.

நாலுமாவடி அருகே உள்ள கச்சனாவிளை புனித மரியன்னை பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் குடிநீர் தொட்டி பழுதாகி காணப்பட்டது. இந்த பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டி அமைத்து தருமாறு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரசிடம் பள்ளி தலைமையாசிரியர் ஆரோக்கிய சுபா மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று புதுவாழ்வு சங்கம் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் அமைத்து கொடுக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடந்தது. இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை வகித்து புதிய குடிநீர் தொட்டியை திறந்து வைத்து பேசினார்.

இதேபோல் புதுவாழ்வு சங்கம் சார்பில் அங்கமங்கலம் பஞ்., அலுவலகத்திற்கு ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் தளக்கல் போன்றவை அமைத்து கொடுக்கப்பட்டது. இந்த சுற்றுச்சுவரை மோகன் சி லாசரஸ் திறந்து வைத்தார். இதில் பஞ்., தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியலீலா, நாகராஜன், மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் கென்னடி, பஞ்., செயலர் கிருஷ்ணம்மாள், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.