சேர்வைக்காரன்மடம் காமராஜர்நகரில் கிங் மேக்கர் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி

Servaikaranmadam

சேர்வைக்காரன்மடம் காமராஜர்நகரில் கிங் மேக்கர் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி காமராஜர் நகர் கிங் மேக்கர் கிரிக்கெட் கிளப் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை முன்னாள் ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா துவங்கி வைத்து இளைஞர்களை வாழ்த்தினார். போட்டியில் முதல் பரிசை சிவத்தையாபுரம் சிசி அணி பெற்றது. இரண்டாவது பரிசு காமராஜ்நகரை சார்ந்த கிங்மேக்கர் அணிக்கு கிடைத்தது. சாயர்புரம் உதவி காவல் ஆய்வாளர் அந்தோணி  சூசைராஜ், முதல் பரிசுக்கான வெற்றி கோப்பையை வழங்கினார். இரண்டாவது பரிசை முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெபக்கனி ஞானசேகர் வழங்கினார். 

வெற்றி பெற்ற அணி வீரர்களை உதவி ஆய்வாளர் அந்தோணி  சூசைராஜ் வாழ்த்தினார். மேலும் அவர், இளைஞர்கள் தங்கள் கவனத்தை விளையாட்டில் செலுத்த வேண்டும். விளையாட்டு நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளித்து மனதை ஒருமுகப்படுத்தும். போதையில்லா சமூகத்தை உருவாக்க நீங்கள் முன்னோடியாகத் திகழ வேண்டும் என அறிவுரை வழங்கினார். காமராஜர் நகர் தேவா கிங்மேக்கர் கிரிக்கெட் அணி சார்பில் நன்றி கூறப்பட்டது.