கூட்டாம்புளி தொழிலாளி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகன், தாய் குற்றவாளிகள் - தூத்துக்குடி நீதிமன்றம் அறிவிப்பு

Murder

கூட்டாம்புளி தொழிலாளி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகன், தாய் குற்றவாளிகள் - தூத்துக்குடி நீதிமன்றம் அறிவிப்பு

கூட்டாம்புளி விவசாய தொழிலாளி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மகன், தாய் ஆகியோர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தண்டனை விபரங்கள் வரும் 12ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி கீழத்தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் என்ற சுயம்புலிங்கம் மகன் ஜெயபாலன் என்ற கண்ணன்(45). விவசாய தொழிலாளியான இவரை கடந்த 23.07.2013 அன்று அதே பகுதியை சேர்ந்த அழகுலிங்கம், அவரது மனைவி மல்லிகா,மகன் சுயம்புலிங்கம் மற்றும் 14வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து முன் பகை காரணமாக வெட்டி கொலை செய்தனர். இதை தடுத்த கண்ணனின் மனைவி தங்கஜோதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இது தொடர்பாக புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அழகுலிங்கம் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். இதில் 14 வயது சிறுவன் தொடர்பான வழக்கு இளம் சிறார் நீதி குழுமத்தில் நடந்து வருகிறது. 

மற்ற மூவர் மீதான வழக்கு முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை காலத்தில் முதல் குற்றவாளியான அழகுலிங்கம் இறந்துவிட்டார். இந்தநிலையில் இன்று வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி பிலிப்நிக்கோலஸ், குற்றம்சாட்டப்பட்ட அழகுலிங்கம் மனைவி மல்லிகை, மகன் சுயம்புலிங்கம் ஆகிய இருவரையும் குற்றவாளியாக அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விபரங்களை வரும் 12ம் தேதி அறிவிப்பதாக உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் எஸ்.பி.ஆனந்த்கேப்ரியேல்ராஜ் ஆஜரானார்.