ஏரல் அருகே பெண் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை

Murder News

ஏரல் அருகே பெண் வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள அகரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்திரலிங்கம். இவரது மனைவி தேவிகலா. இவர்களுக்கு திருமணமாகி நிர்மல், இளமாறன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். நிர்மல் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இளமாறன் 7 ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் இன்று(25.11.2024) வீட்டில் இருந்த தேவிகலாவை மர்மநபர் ஒருவர் கத்தியால் குத்தி தாக்கினார். தேவிகலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தனர். அவர்களை பார்த்ததும் கத்தியால் குத்திய நபர் தனது பைக் மற்றும் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். சம்பவம் குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த ஏரல் போலீசார், தேவிகலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலானபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தேவிகலாவை கொலை செய்தது அதே பகுதியைச் சேர்ந்த லிங்கராஜ் என்பது தெரியவந்துள்ளது. தப்பியோடிய லிங்கராஜை போலீசார் தேடி வருகின்றனர். 

கொலைக்கான காரணம் உடனே தெரியவில்லை. தேவிகலாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர் சந்திரலிங்கம் மனைவி தேவிகலாவை கண்டித்து வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.