மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு - கிராம சபை கூட்டத்தில் விவாதம்

Thoothukudi

மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு - கிராம சபை கூட்டத்தில் விவாதம்

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி ஊராட்சி ஓன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிராமசபை கூட்டம் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது. 

அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் பொதுமக்கள் கலந்து கொண்டு பலர் பேசுகையில் தங்களது பகுதிகளில் புதிய சாலை மின்விளக்கு குடிதண்ணீர் அன்மையில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை சரி செய்து தரவேண்டும். பல்வேறு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்காமல் இருக்கின்றன. அதையும் வழங்க வேண்டும். என்று கோரிக்கை வைத்தவர்கள் மத்தியில் சிலர் மாநகராட்சியோடு இணைக்க வேண்டும் என்றும் பேசினார்கள். வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி பேசும் போது, மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட 5 ஊராட்சி பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக முழுமையான அடிப்படை பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. பல சமயங்களில் கோடைகாலங்களில் கடுமையான குடிநீர் தட்டுபாடும் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் நமக்கு எல்லா வகையிலும் உரிமைகள் வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. ஆனால் இருப்பதையும் இழந்து விட்டு நடுத்து தெருவிற்கு வந்துவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் பேசுகையில், கடந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கனமழையாலும் அருகிலுள்ள சில பகுதியில் இருந்த குளம் கன்மாய்கள் உடைப்பு ஏற்பட்டதாலும் பெரும் மழை வெள்ளத்தால் நமது பகுதி பாதிக்கப்பட்டது. இருப்பினும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் மீனவர்நலன் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி சண்முகையா எம்.எல்.ஏ கலெக்டர் மற்றும் பல்வேறு துறை அமைச்சர்கள் அதிகாரிகள் நமது பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து தேவையான உதவிகளையும் செய்து கொடுத்தனர். அதனடிப்படையில் ஊராட்சி மன்ற நிர்வாகமும் மக்களுக்கு தேவையான பல்வேறு பணிகளை உடனிருந்து செய்து கொடுத்துள்ளோம் எல்லா பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையான கட்டமைப்பு பணிகளை இந்த அரசு செய்து கொடுக்கும். மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதி முழுமையான வளர்ச்சியடைவதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார். 

மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் விடுபட்டவர்களுக்கும் பல்வேறு பகுதியில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா, முழுமையாக வழங்கப்பட வேண்டும். மழை காலங்களில் மழை நீர் தேங்காத வகையில் புதிய கால்வாய்கள் அமைப்பதற்கு நீர்வழித்தடங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அவற்றை அகற்றுவத மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024 2025ம் ஆண்டு நிதி ஆண்டிற்கான கிராமவளர்ச்சி திட்டம் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதித்தல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் வட்டார வளர்ச்சி மண்டல துணை அலுவலர் மகேஸ்வரி, கால்நடை ஆய்வாளர் பாபு சௌந்தரி, சுகாதார இடைநிலை செவிலியர் ராஜலட்சுமி, மீன்வளத்துறை செல்வபெருமாள், தொழிலாளர் நல வாரியம் ஜீவிதா, சர்மிளா பானு, கிராம நிர்வாக அலுவலர் அமலதாசன், மாப்பிள்ளையூரணி நகர கூட்டுறவு கடன்சங்க செயலாளர் பாலமுருகன், ஊராட்சி வடக்கு மின்சார வாரிய வனிக ஆய்வாளர் வெள்ளத்துரை, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, துணை அமைப்பாளர் ஜீவா, ஓன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி உன்னத் பாரத் அபியன், நாட்டுநலப்பணி திட்ட ஓருங்கிணைப்பாளர் சண்முகப்பிரியா, தெற்கு மாவட்ட திமுக மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் வில்சன், பிரதீப்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ராணி, சக்திவேல், பாண்டியம்மாள்,  தங்கமாரிமுத்து, அந்தோணி பாலம்மாள், ஜேசுராஜா, வசந்தகுமாரி, பாரதிராஜா, ஜேசுஅந்தோணி பெலிக்ஸ், ஜுனத்பீவி, தங்கபாண்டி, உமாமகேஸ்வரி, திமுக ஓன்றிய துணைச்செயலாளர்கள் கணேசன், ராமசந்திரன், சப் இன்ஸ்பெக்டர் முனியசாமி, தனிப்பிரிவு ஏட்டு முருகேசன், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாவட்ட ஓருங்கிணைப்பாளர் அருள் செல்வி, திமுக கிளைச்செயலாளர்கள் பொன்னுச்சாமி, முருகன், மற்றும்  பொதுமக்கள் நாட்டுநலப்பணித்திட்ட கல்லூரி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.