மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் - குடியரசு தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை

Thoothukudi N.P.JEGAN

மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றுவோம் - குடியரசு தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி சூளுரை

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் 75வது குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மாநகர்நல அலுவலர் சுமதி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் திட்டம் ராமசந்திரன் வரவேற்புரையாற்றினார். மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். 

தூத்துக்குடி மாநகராட்சியில் 2023-24ம் ஆண்டில் அலுவலக பணி மற்றும் மழை வெள்ள கால்தில் சிறப்பாக பணியாற்றிய நிரந்தர மற்றும் தற்காலிக ஓப்பந்தபணியாளர்களுக்கு நற்சான்றிதழ், பொதுமக்களிடையே தேசிய வாக்காளர் தின நாளை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோலமிடும் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட  நகர்புற வாழ்வாதார மைய பணியாளர்கள் உள்பட 178 பேருக்கு நற்சான்றிதழ், பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்த மேயர், வெள்ளைக்காரனை எதிர்த்து சுதந்திரம் அடைந்தோம். பின்னர் குடியரசு தினத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கொடியேற்றும் உரிமையை பெற்றுக் கொடுத்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் பொறுப்பேற்று 22 மாதங்கள் ஆகின்றன. இரண்டு பக்கமும் சில சமயம் கத்தி போன்று கூர்மையாக இருக்கின்றன. எந்த பக்கம் திரும்பினாலும் குத்து. 2019 2021ல் பெய்த மழையின் போது மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் அப்பகுதியில் தண்ணீர் தேங்க கூடாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க பணியாற்றினார். ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கன மழையாலும் அருகிலுள்ள சில கன்மாய் குளங்கள் உடைப்பு ஏற்பட்டதால் ஊருக்குள் தண்ணீர் வந்தது. பல பகுதிகளில் இரவு பகலாக 15 நாட்கள் தொடர்ந்து கண் விழித்துக்கொண்டு உறங்காமல் பணியாற்றினோம். உங்களுக்கு வழிகாட்டியக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், நேரு, மற்றும் பல அமைச்சர்கள், கலெக்டர், உள்ளிட்ட உயர் அதிகாரிகள் முழுமையாக இருந்து பணியாற்றினார்கள். பல தேசிய நெடுஞ்சாலைகளிலும் நான்கு அடி தண்ணீர் இருந்த நிலையில் அதை கடந்து தான் ஊருக்குள் தண்ணீர் வந்தும் பாதிப்பு ஏற்படுத்தியது. ஆனால் ஆணையர் மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதில் முன்னோடியாக இருந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். ஒவ்வொரு சாலை பகுதியும் 3 வருடம், 5 வருடம் என சில விதிமுறைகளின்படி உள்ளன. ஊர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக புதுமையான பல திட்டங்களையும், செயல்படுத்த வேண்டும் என்ற கடமையில் நாங்கள் இருக்கிறோம். மாநகரில் தற்போது 7 லட்சத்திற்கு மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். 2008ல் துணை முதலமைச்சராக இருந்து தற்போது முதலமைச்சராக பணியாற்றும் ஸ்டாலின் கொண்டு வந்த பக்கிள் ஓடை திட்டம் மூலம் கடலுக்கு மழை நீர், கழிவு நீர் கொண்டு செல்லப்படுகிறது. அதையும் சுத்திகரிக்கப்பட்டு செடி வளர்ப்பதற்கென்று ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மாநகர பகுதியில் 152 பூங்காக்கள் இருக்க வேண்டிய இடத்தில் 40 பூங்காக்கள் தான் இருந்தன. இப்போது புதிய பூங்காக்கள் பல உருவாக்கப்பட்டுள்ளது. 

பலர் பூங்கா இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளனர். அதை படிப்படியாக மீட்போம். முத்துநகர் கடற்கரை ரோச் பூங்கா என பல இடங்கள் அழகுபடுத்தப்பட்டு, தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் உள்ள பலரும் ஆரோக்கியத்தை பேணி பாதுகாத்திடும் வகையில் நடைபயிற்சி, யோகா உள்ளிட்டவைகள் மூலம் பலனடைந்து வருகின்றனர். வி.இ.ரோடு, ஜெயராஜ் ரோடு பகுதிகளில் பொதுமக்கள் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு நல்லதொரு அமைப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். வளர்ந்து வரும் மாநகர பகுதிகளில் உள்ள தொழிலதிபர்கள் மாநகர வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும். பொதுமக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றும் என்று பேசினார். 

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், சுரேஷ்குமார், சரவணக்குமார், ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், கண்ணன், பொன்னப்பன், முத்துவேல், பவானி மார்ஷல், ரெக்ஸின், ராஜேந்திரன், ஜாக்குலின்ஜெயா, தெய்வேந்திரன், சுயம்பு, ரெங்கசாமி, ஜான், ஜாண்சிராணி, ஜெயசீலி, ரிக்டா, சுப்புலட்சுமி, விஜயலட்சுமி, காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, கற்பக கனி, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் முத்துமாரி, தனலெட்சுமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மும்தாஜ்,  பொறியாளர் பாஸ்கர்,  உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், உதவி ஆணையர்கள் தனசிங்,  சேகர், சுகாதார ஆய்வாளர்கள் ஹரிகணேஷ், ராஜசேகர், ராஜபாண்டி, ஸ்டாலின் பாக்கியநாதன், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். மாநகராட்சி உதவி பொறியாளர் சரவணன் நன்றியுரையாற்றினார்.