நாசரேத் அருகிலுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 125-வது ஆண்டு விழா! - மே 4ம் தேதி முதல் துவங்குகிறது

Nazareth

நாசரேத் அருகிலுள்ள பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய 125-வது ஆண்டு விழா!  - மே 4ம் தேதி முதல் துவங்குகிறது

நாசரேத்,மே.02:நாசரேத் அருகிலு ள்ள பிள்ளையன்மனை தூய பரமே றுதலின் ஆலய 125-வது ஆண்டு விழா மே 4 ஆம்தேதிமுதல் துவங்கி 12 ஆம்தேதிவரை நடைபெறுகிறது. 

தூய பரமேறு தலின் ஆலய 125 வது ஆண்டு விழா 9 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான மே 4 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு ஆலயவளாகத்தில் வி.பி.எஸ்.கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.                5ஆம் தேதி ஞாயிறுகிழமை முதல் 7ஆம்தேதிசெவ்வாய்கிழமை வரை 3 நாட்கள் இரவு 7 மணிக்கு உயிர்மீட்சிக்கூட்டங்கள் நடக்கிறது.  இதில்  சென்னையைச் சேர்ந்த சகோ.ஆல்பர்ட் சாலமோன்,  சகோ தரி. பிந்து ஆல்பர்ட் ஆகியோர் தேவ செய்தி கொடுக்கின்றனர்.

ஐந்தாவது நாளான மே 8 ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணி க்கு பரி.ஞானஸ்நான ஆராதனை யும்,மாலை 4 மணிக்கு புதுப்பிக்கப் பட்ட ஆலயத்தின் பிரதிஷ்டையும், அதனைத்தொடர்ந்து 125 வது ஆண் டு ஆலய பண்டிகை ஆராதனையும் நடைபெறுகிறது. இதில் திருமண் டல நிர்வாகஸ்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். ஆறாவது நாளான மே   9 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு ஆலயப் பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நடக்கிறது.  இதில் சபைமன்றத் தலைவரும், சேகரத் தலைவருமான வெல்ற்றன் ஜோசப் தேவசெய்திகொடுக்கிறார். மாலை 4 மணிக்கு அசன விருந்து நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு சிறப்பு,சிரிப்பு பட்டிமன்றம் நடைபெ  றுகிறது.திருமறையின் அடிப்படை யில் குடும்பத்தின் புகழுக்கும் பெரு மைக்கும் முக்கியகாரணம்ஆணின் தலைமையே, பெண்ணின் பெரு மையே என்றதலைப்பில் பாளைய ங்கோட்டை தூய யோவான் கல் லூரி ஒய்வு பெற்ற முதல்வர் ஜான் கென்னடி தலைமையில் பட்டி மன் றம்  நடைபெறுகிறது.

ஏழாவது நாளான மே 10ஆம்தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி க்கு அறுப்பின் பண்டிகை  மற்றும் ஆண்கள் பண்டிகை ஆராதனை நடைபெறுகிறது.இதில் கொடை ரோடு குருசேகரத் தலைவர் எஸ். பிரபுதாஸ் அருட்செய்தி வழங்குகி  றார்.மாலை 4 மணிக்கு ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் மாபெரும் விளையாட்டுப்போட்டி நடைபெறு கிறது.  இரவு 8 மணிக்கு ஆலய வ ளாகத்தில் இந்திய மிஷனரி சங்க கலைநிகழ்ச்சிகள்நடைபெறுகிறது. எட்டாவது நாளான மே 11 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி க்குதிடப்படுத்துதல் ஆராதனையும், மாலை 4 மணிக்குவாலிபர் ஐக்கிய சங்கம் சார்பில் விளையாட்டுப் போட்டிகளும், இரவு 8 மணிக்கு ஆலய வளாகத்தில் மாபெரும் இன் னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது.

ஒன்பதாவது நாளான மே 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பாடகர் ஞாயிறு சிறப்பு  ஆராதனை நடைபெறுகிறது. இதில் ஸ்ரீவைகுண்டம் சேகரத் தலைவர் வேதநாயகம் அருட்செய்தி வழங்கு கிறார்.காலை 11:30 மணி முதல் 5 மணி வரை வாலிப ஆண்கள் பண் டிகையும், வாலிப பெண்கள் பண் டிகையும் நடைபெறுகிறது. இதில் சென்னையைச் சேர்ந்த எட்வின் ஆபிரகாம் சிறப்புச் செய்தி கொடுக் கிறார்.இரவு 6:30 மணிக்கு சென் னையைச்சேர்ந்த ஹெலன்சத்தியா குழுவினரின் ஸ்தோத்திர கூட்டம் நடைபெறுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை சேகரத் தலைவரும்,சபைமன்றத் தலைவரு மான வெல்ற்றன்ஜோசப் தலைமை யில் சேகர குருவானவர் ஆல்பர்ட் டேனியல்,சபைஊழியர்கள்ஆரோன்,டென்சிங் மற்றும்திருமண்டலபெரு மன்றஉறுப்பினர்கள்,சேகரக்கமிட்டி உறுப்பினர்கள்,அசனக் கமிட்டி நிர் வாகிகள்மற்றும்சபைமக்கள்செய்துவருகின்றனர்.