தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் விபத்து அச்சுறுத்தலை தரும் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டு.!

Road News

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் விபத்து அச்சுறுத்தலை தரும் தேசிய நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டு.!

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டையில் போக்குவரத்து குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. 

தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு நெல்லை வழித்தடத்தில் இருந்து வரும் பேருந்துகள் புதுக்கோட்டை ஊருக்குள் வந்து செல்வதில்லை. புதுக்கோட்டை ஊருக்குள் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் புறம் வழியாக வெளியே வந்து தேசிய நெடுஞ்சாலையில் இணைகிறது. அதாவது பாலத்தின் கீழ்புறம் மற்றும் பாலத்திற்கான சர்வீஸ் ரோடு வழியாக தூத்துக்குடி நோக்கி வரும் வாகனங்களும், பாலத்தின் வழியாக வரும் வாகனங்களும் ஒன்றிணைந்து தேசிய நெடுஞ்சாலையில் இணையும் இடத்தில்தான் தற்போது குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வைக்கப்பட்டிருக்கும் பேரிகார்டுதான் இப்போது வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வருகிறது. பாலத்தின் மேல் வழியாக வரும் வாகனங்கள் பொதுவாக வேகமாக வரும். சர்வீஸ் ரோட்டில் வந்து நேர் ரோட்டில் இணையும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது உள்ளது. அப்படி ஒரு ஓரமாக வரும் வாகனங்கள் நடுரோட்டில் உள்ள பேரிகார்டை தாண்டும் போது நேர் வழியில் வேகமாக வருகிற வாகனங்களும் இந்த வாகனங்களும் மோதிவிடும் ஆபத்து இருக்கிறது. எனவே தற்போது தேசிய நெடுஞ்சாலையின் மத்தியில் வைக்கப்பட்டுள்ள பேரிகார்டை அப்புறப்படுத்துவதே சரி என்று தெரிகிறது. 

இதனை ஒரு தகவலாக எடுத்துக் கொண்டு அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.