உரிய வழித்தடத்தை புறக்கணிக்கும் அரசு பேருந்து 578 - ஆவலுடன் எதிர்பார்க்கும் கிராம மக்கள்

TNSTC NEWS

உரிய வழித்தடத்தை புறக்கணிக்கும் அரசு பேருந்து 578 - ஆவலுடன் எதிர்பார்க்கும் கிராம மக்கள்

திருவைகுண்டம் அரசு டெப்போவில் இருந்து இயக்கப்படும் தடம் எண் 578 என்கிற பேருந்து தூத்துக்குடி, சாயர்புரம், திருவைகுண்டம், திருநெல்வேலி இடையே இயக்கப்படும் பேருந்தாகும்.

இந்த பேருந்து நாகர்கோவில், நெல்லை கேடிசிநகர், சேரன்மகாதேவி டெப்போக்களில் இருந்து இதே வழித்தடத்தில் இயக்கப்பட்ட இப்பேருந்து தற்போது திருவைகுண்டம் டெப்போவில் இருந்து இயக்கபடுகிறது. முன்பெல்லாம் அதன் வழித்தடத்தில் இயக்கப்படும்போது அதில் குறையிருந்த்து. இப்போது அது வழித்தடத்தில் குறைவாகவே இயக்கப்படுகிறது. அதாவது தூத்துக்குடி – சாயர்புரம் – திருவைகுண்டம் – திருநெல்வேலி என்கிற இதன் வழித்தடத்தில் முறையாக, முழுமையாக இயக்கபடவில்லை. காலை 8.25 மணிக்கு திருவைகுண்டத்தில் கிளம்பி சிவகளை, சாயர்புரம் வழியாக தூத்துக்குடிக்கு செல்லும் இந்த பேருந்து அதன் பிறகு எங்கு போகிறது என்றே தெரியவில்லை. உரிய வழித்தடத்தைவிட்டுவிட்டு திருச்செந்தூர், மதுரை என்று ஊர் சுற்றுவதாக தெரிகிறது. திருச்செந்தூர், மதுரை இடையே பேருந்து சேவை ரொம்ப குறைவு என்று நினைக்கிறார்கள் போல். கிராம மக்களையும் நகர மக்களையும் இணைக்கும் பேருந்தை அப்படியே தூக்கி பைபாஸில் ஓட்டுகிறார்கள். இப்பேருந்து குறித்து விபரம் கேட்போரிடம் இதோ வருகிறது அதோ வருகிறது என்று கூறுகிறார்களே தவிர, எப்போ வரும் எப்படி வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.

தூத்துக்குடியில் இருந்து காலை 9.45 மணிக்கும், மாலை 5.45 மணிக்கும் கிளம்பி சாயர்புரம், திருவைகுண்டம் வழியாக திருநெல்வேலிக்கு செல்வது மற்றும் திருநெல்வேலி, திருவைகுண்டம், சாயர்புரம், தூத்துக்குடி வழித்தடத்தடத்தில் காலை, மாலையில் இயக்கப்படுவதான பேருந்து சேவைகள் தற்போது இல்லை. இதனால் இந்த பேருந்தை நம்பி உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். அந்த நேரங்களில் இப்பேருந்து இல்லாதது தனியார் பேருந்துகளுக்குதான் வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஏற்கனவே இந்த பேருந்தை காலையில் திருவைகுண்டத்தில் இருந்து கிளம்பும் நேரமான 8.25 மணியை மாற்றி ஆரம்ப கால நேரமான 7.55 மணிக்கு கிளம்பும்படி செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் மேற்கூறிய காலை 9.45, மாலை 5.45 மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் மாலை 4.00 மணிகளில் இப்பேருந்தை கிளம்பச்செய்ய முடியும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். ஆனால் அரசு போக்குவரத்து கழக துறையினர் இழுத்தடித்துக் கொண்டே இருக்கின்றனர்.

எனவே 578 என்கிற இந்த பேருந்தை அதன் உரிய வழித்தடத்தில் முறையாக இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் மீண்டும் கேட்டுக் கொள்கின்றனர்.   

திருவைகுண்டம் டெப்போவிற்கு மாற்றம் செய்து பல மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை 578 என்கிற தடம் எண்ணோடு இப்பேருந்து ழித்தடத்தில் இயக்கவில்லை. அவ்வப்போது எதாவது ஒரு பேருந்து செல்கிறது. அதனால் தடம் எண்ணோடு உள்ள பழைய போட்டோவை இதில் வெளியிட்டுள்ளோம்.