அதிரடி அமைச்சருக்கு எதிராக கொதித்த அனிதா - தக்க பதிலடி கொடித்த அதிரடி அமைச்சர் ரமேஷ்

Thiruchendur Murugan

அதிரடி அமைச்சருக்கு எதிராக கொதித்த அனிதா - தக்க பதிலடி கொடித்த அதிரடி அமைச்சர் ரமேஷ்

’’இந்த கொடுமையை தட்டி கேட்க யாராவது வராமலா போயிடுவாங்க.. எங்க முருகப்பெருமான் யாரையாவது அனுப்பி வைப்பான்’’ என்று ஆதங்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள். அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே அந்த முருகப்பெருமான் அனுப்பி வைத்தவர் போல் நேற்று கோயிலுக்கு வந்தார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ். மாறுவேடத்தில் வந்து கோயிலுக்குள் செல்ல லஞ்சம் கேட்கும் ஒரு அர்ச்சகர் மற்றும் 2 காவலர்களை கண்டுபிடித்து நடவடிக்கைக்கு உள்படித்தியிருக்கிறார். இந்த தகவல் செய்தி ஊடகங்கள் வாயிலாக வெளியே வர, மெத்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் பக்தர்களும், பொதுமக்களும். ஆனால் முன்னாள் அமைச்சரும், தற்போதைய திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏவுமான அனிதாராதாகிருஷ்ணன், அமைச்சர் ரமேஷின் நடவடிக்கைக்கு எதிராகவும், திரிசுதந்திரர்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆய்வு என்ற பெயரில் அமைச்சர் ரமேஷ் ஐயங்கார்
அங்குள்ள அர்ச்சகர்களை மிகவும் கேவலமாக இழிவுபடுத்தியுள்ளார். மேலும் பல தலைமுறைகளாக பாரம்பரிய முறைப்படி ஆன்மிகப் பணியாற்றி வரும் திரிசுதந்திர அர்ச்சகர் சமுதாயத்தையும் அவர் கடுமையாக அவமதித்துள்ளார். திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் எவ்வித சிரமமுன்றி சுவாமி தரிசனம் செய்வதற்கு இந்த அர்ச்சகர்கள் தங்களது முழுமையான உதவிகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறையைச் சாராத திரிசுதந்திர அர்ச்சகர்கள், பாரம்பரிய மரபு வழியாகக் கோயில் வழிபாட்டு முறைகளிலும் பக்தர்களுக்கு வழிகாட்டுவதிலும் தங்களை அர்ப்பணித்து உதவி வருகிறார்கள்’’என்று கூறியிருந்தார்.

இது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. ‘’திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து மனநிறைவோடு சாமி கும்பிட முடியாமல் போவதற்கு இந்த திரிசுதந்திரர்களும் பலநேரங்களில் காரணமாக இருந்திருக்கிறார்கள். மணிக்கணக்கில் வரிசையில் காத்து நிற்கும் பக்தர்களிடம் சண்டைபோட்டு அவர்களை சஞ்சலம் அடைய செய்வது பெரும்பாலும் அவர்களால்தான் நடந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது இந்த முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்.எல்.ஏ அனிதாராதாகிருஷ்ணன், திரிசுதந்திரர்களுக்கு ஆதரவாகவும், புதிதாக வந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள அமைச்சர் ரமேஷை முடக்கும் வகையிலும் அறிக்கை வெளியிட்டிருப்பது ஏற்புடையது அல்ல. திருச்செந்தூர் தொகுதியில் 7வது முறை வெற்றி பெற்றுள்ளதாக பெருமைபட்டுக் கொள்ளும் அனிதாராதாகிருஷ்ணன், முருகன் கோவிலுக்காக ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் வந்து குவியும் பக்தர்களுக்கு போதிய அளவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்திருக்கிறாரா?. எதிர்காலத்தில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து 7 தடவை மக்கள் பிரதிநியாக உள்ள அனிதாவிடம் என்ன திட்டம் இருக்கிறது?. லட்சக்கணக்கில் கூடும் பக்தர்களை அடிப்படையாக கொண்டு திருச்செந்தூர் தொகுதியை ஒரு சுற்றுலா ஸ்தலமாக ஆக்கியிருக்கலாம்.  இங்குதான் திருச்செந்தூர் முருகன் கோயில், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் மற்றும் குலதெய்வ கோயில்கள் நிறைய இருக்கிறது. கிட்டத்தட்ட புன்னக்காயல் முதல் மனப்பாடு பகுதியையும் தாண்டி கடற்கரை இருக்கிறது. இதனை மையமாக வைத்து மக்களுக்கு ஏற்பாடு செய்துள்ள திட்டங்கள் என்ன? தொகுதி பக்கத்தில் தாமிரபரணி ஆறு இருந்தும் தொகுதியில் வறட்சி பகுதிகள் இன்னும் இருந்து வருகிறதே அதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் இந்த நீண்ட கால மக்கள் பிரதிநிதி’’என்று அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்துள்ள திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள், ஆன்மிக விவகாரத்துக்குள் கருத்து சொல்ல நுழைந்தால், அங்கு நல்லது செய்ய தயாராக இருக்க வேண்டும். அங்கு நல்லது செய்தால் மற்ற மதத்தவர்கள் தனக்கு ஓட்டுபோட மாட்டார்கள் என்று கருதி ஒதுங்கு கொள்வோர் இதுபோன்ற நேரங்களிலும் ஒதுங்கி இருப்பதே நல்லது என்றனர் காட்டமாக. 

இந்தநிலையில் அனிதாராதாகிருஷ்ணன் கண்டன அறிக்கைக்கு தனது வலைதளம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்.  "திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் அவர்களே, உங்களைப் போல் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர் போடும் வழக்கம் உண்மையில் பெரியாரைப் பின்பற்றுபவர்களுக்குக் கிடையாது. மக்களைச் சுரண்டிப் பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி, மத பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கத்தான் மக்கள் எங்களை வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.

பக்தர்களிடம் சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பெற்றுத்தான் சேவை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, அப்படிச் செய்வது சேவையும் இல்லை, அதை எந்தக் கடவுளும் சொல்லவில்லை. நேற்றுவரை சாதியை வைத்து ஆதரவாக செயல்படுகிறேன் என்று திமுகவினர் பேசினீர்கள். இன்று அதே சாதியை சார்ந்தவர்களை அவமதித்துவிட்டதாக பேசுகிறீர்கள். தவறு செய்தவர்களைத் தண்டித்தால் தங்களுக்கு எதற்காகத் திடீர் கொந்தளிப்பும் பதற்றமும் வருகிறது என்று தெரியவில்லை. இன்னும் பல முறைகேடுகளை விரைவில் வெளிக்கொணர்வேன். அதில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்"என்று பதிலடி கொடுத்துள்ளார் அமைச்சர் ரமேஷ்.    

எதிரியை வீழ்த்தும் வேலவனிடம் வீழும் எதிரி யார்?