தென் மாவட்ட உழவர்களுக்கு வெள்ள நிவாரணப்பொருட்கள் - சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

Thoothukudi collector

தென் மாவட்ட உழவர்களுக்கு வெள்ள  நிவாரணப்பொருட்கள் - சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று (29.01.2024) தென் மாவட்ட உழவர்களுக்கு வெள்ள  நிவாரணப்பொருட்களை  தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு வழங்கினார். அப்போது மீன்வளம் -மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தார். 

அப்போது சபாநாயகர் அப்பாவு,  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் சார்பாக 2000க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 1 மூடை விலையில்லா ஆர்கானிக் நுண்ணுயிர் உரங்கள், 10 கிலோ விதைகள் வழங்கப்படவுள்ளது. முக்கியமான 4 நிறுவனங்கள் இந்த இடுபொருட்களை இலவசமாக தந்துள்ளார்கள். அந்த நிறுவனங்களை பாராட்டுவதை நான் பெருமையாக கருதுகிறேன். சாதி, சமய, இனத்திற்கு அப்பாற்பட்டு மனிதநேயத்தோடு இந்த இடுபொருட்களை தந்த அந்த நிறுவனத்தினரை நான் பாராட்டுகிறேன். தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. 

24 லட்சம் விவசாயிகள் இலவச மின்சாரம் மூலம் பயனடைந்து வருகிறார்கள். ரூ.2500 கோடி மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு 7,000 கோடி விவசாய கடனை முத்தமிழறிஞர் கலைஞர் தள்ளுபடி செய்தார். விவசாயிகளுக்கு தேவையான அனைத்தையும் செய்யக்கூடிய அரசு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு. தமிழ்நாட்டில் உயர் கல்வி பயின்றோர் சதவீதம் 51 சதவீதமாக உள்ளது. பெண்கள் 72 சதவீதம் கல்வி கற்றுள்ளனர். வேலைக்கு செல்வதில் தமிழ்நாட்டு பெண்கள் அதிகம் உள்ளனர். 1.15 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. 37000 அரசு பள்ளிகளில் பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இப்படி ஒரு ஆட்சி இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில் பசியும் கிடையாது, பட்டினியும் கிடையாது.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை அமைச்சர் பெருமக்கள் மற்றும் அலுவலர்கள் மேற்கொண்டார்கள். விவசாயிகள் கால்நடை மூலம் வருமானம் பெற்று வருவதால் தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பிறகு இரண்டு முறை பால் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளார்கள். முத்தமிழறிஞர் கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்கள். மக்களுக்கு நெல் எவ்வளவு தேவை, வாழை எவ்வளவு தேவை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களின் தேவையை ஆய்வு செய்து அதை விளைவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இந்த வேளாண் கல்லூரிதான் ஒரு திட்டத்தை கொண்டு வந்தார்கள் என்ற நிலையை கொண்டு வர வேண்டும். தங்களால் நிச்சயமாக முடியும். வேளாண் பல்கலைக்கழகத்தை நான் முழுமையாக நம்புகின்றேன். மீன்களை வழங்குவதை விட மீன்பிடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பழமொழிக்கேற்ப செயல்பட வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி பொறுபப்பேற்ற இரண்டரை ஆண்டுகளில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் வழங்கியதைவிட அதிகமாகும். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட அதிக வௌ;ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் சுற்றுள்ள 40 கிராமங்களை சோ;ந்த பொதுமக்களை இரவோடு இரவாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  அறிவறுத்தியள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்திரமாக மீட்டுள்ளார். இது மிகவும் பாராட்டுக்குரியது ஆகும். இதுபோன்ற சரியான நேரத்தில் சரியான அறிவுரையை வழங்கி பெரும் உயிர் சேதத்தை தவிர்த்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.  

அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத அதிகனமழை பெய்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் அதிகளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். கடம்பாகுளம் உள்ளிட்ட பல்வேறு குளங்கள் உடைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.   தமிழ்நாடு முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் மழை வெள்ள மீட்பு பணிகளை விரைந்து மேற்கொண்டார்கள். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்தார் என்றார்.   

அதேபோல் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சுமார் 10 நாட்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டார். விவசாயிகளின் மழை வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சமிபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் துணைவேந்தர் கீதாலட்சுமி, கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் தேரடிமணி, கருங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கோமதிராஜேந்திரன், வேளாண் இணை இயக்குநர் (பொ) சாந்திராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மார்ட்டின்ராணி,  ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் சிவக்குமார்,  கிள்ளிகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் சந்திராமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்