தூத்துக்குடியில் கலைஞர் நூலகம் - அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

Minister Geethajeevan

தூத்துக்குடியில் கலைஞர் நூலகம் - அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 5வது வார்டு கிருஷ்ணராஜபுரம் மேற்கு 4வது தெருவில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி அமைக்கப்பட்ட நூலக கட்டிடத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து, நூலகத்தை பார்வையிட்டு, திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். 

மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, கவுன்சிலர்கள் அந்தோணி பிரகாஷ்மார்ஷலின், நாகேஸ்வரி, தனலட்சுமி, தெய்வேந்திரன், ஜெயசீலி, பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் பிரதீப், ஜோசப் அமல்ராஜ், ராதாகிருஷ்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் பிரவீன்குமார், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், தகவல்தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, 

மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், செல்வகுமார், நாராயணன், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர அயலக அணி அமைப்பாளர் வக்கீல் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாநகர அணி துணை அமைப்பாளர்கள் சீதாலட்சுமி, நாராயணவடிவு, சங்கர், பழனி, பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டச்செயலாளர்கள் சதிஷ்குமார், ராஜாமணி, முனியசாமி, நிர்வாகிகள் உலகநாதன், காளிதாஸ், ஆணைக்குட்டி, ஆவுடையப்பன், ராஜேந்திரன், முருகன், சுரேஷ்குமார், தியாகராஜன், மணி மாடசாமி, கவிதா, மாரியப்பன், சக்திவேல், ரேவதி, அரசு வக்கீல் மாலாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.