10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டம் 9வது இடம் - ஆட்சித்தலைவர் தகவல்
Tuty Collector
தூத்துக்குடிமாவட்டம் 10-ம் வகுப்புபொதுத்தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் 9வது இடம் பிடித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மார்ச் / ஏப்ரல் 2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (20.05.2026) வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகள் என மொத்தம் 308 பள்ளிகளில், 21762 மாணாக்கர்கள் தேர்வெழுதி, 10157 மாணவர்கள், 10855 மாணவியர் என மொத்தம் 21022 மாணக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநில அளவில் தேர்ச்சி சதவீதத்தில் தூத்துக்குடி மாவட்டமானது 9 வது இடம் பிடித்துள்ளது. தேர்ச்சி சதவீதம் 96.60 ஆகும். இம்மாவட்டத்தில் 159 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் உள்ள 89 அரசுப் பள்ளிகளில் இருந்து 2336 மாணவர்கள் மற்றும் 3107 மாணவியர் என மொத்தம் 5443 மாணாக்கர்கள் தேர்வெழுதியுள்ளனர். அதில் 2177 மாணவர்கள், 3036மாணவியர் என மொத்தம் 5213 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் 95.77 ஆகும். 40 அரசுப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று மாணவ / மாணவியர் சாதனை புரிந்துள்ளனர். மாநில அளவில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தில் தூத்துக்குடி மாவட்டமானது 6வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
nadunilai.com