நாசரேத் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள், மூலிகை கன்றுகள் வழங்கல்.!

nazareth nss news

நாசரேத் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள், மூலிகை கன்றுகள் வழங்கல்.!

நாசரேத் ஆசிர்வாதபுரத்தில் நடைபெற்ற என்.எஸ்.எஸ் முகாமில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள், மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது.   

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு 10 நாட்கள் முகாம் நாசரேத் பேரூராட்சியை சேர்ந்த ஆசீர்வாதபுரத்தில்  துவங்கியது. முகாம் துவக்க விழாவில் முதலை மொழி சேகரத்தைச் சேர்ந்த  டீக்கன் பால்ராஜ்  ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர்  கென்னடி வேதராஜ் தலைமை தாங்கி வரவேற்று பேசினார்.  நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார், நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சி துணைத் தலைவர் அருண்சாமுவேல்,8-வது வார்டு உறுப்பினர் எபநேசர் சாமுவேல், உபதேசியர்  அந்தோணி, ஊர் முக்கிய பிரமுகர் சாமுவேல், உதவி திட்ட அலுவலர்கள்  தனபால், காமா சாமுவேல், ரீபைனர் மேஷாக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

என் எஸ் எஸ். மாணவன் இப்ராஹிம் ஷாடோனிக்ஸ் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். ஊர் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள், பழமரக்கன்றுகள், மூலிகை கன்றுகள் வழங்கப்பட்டது . என்.எஸ்.எஸ். மாணவர்கள் மரக்கன்றுகள் நட்டு களப் பணியை தொடங்கினர்.  கோயில் வளாகத்தை சுற்றி தூய்மை செய்து முட்புதர் களை அகற்றினர். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல்  நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் எஸ் சுதாகர், தலைமை ஆசிரியர்  கென்னடி வேதராஜ் ஆகியோர் தலைமையில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜெய்சன் சாமுவேல் உதவி திட்ட அலுவலர் தனபால், ரீஃபைனர் மேஷாக் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.