காமராஜர் பிறந்த நாளை கூட்டம் கூட்டமாக கொண்டாடிய அரசியல் கட்சிகளும், அமைப்பினரும்
k.kamarajar news
இந்த பிரபஞ்சத்தில் எதுவும் வெற்றிடமாக இருக்க போவதில்லை. அந்த வெற்றிடத்தை தானாகவே நிரப்பும் அமைப்பு கொண்டதுதான் இயற்கை. அதுபோலத்தான் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாள் நாளை கொண்டாடுவதன் மூலம் அவரது கொள்கையை பின்பற்றுகிறோம் என்று காண்பிக்க சில அரசியக் கட்சிகள் முயற்சி செய்வதாக தெரிகிறது.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கு.காமராஜர், உண்மை, நேர்மை, எளிமை என்று தனிமனித ஒழுக்கம் என்று மட்டுமில்லாமல் அடுத்த தலைமுறையின் நலனுக்கான செயல்திட்டங்களை வகுத்து வழங்கியதில் நிகரில்லாதவர் என்று அறியப்பட்டவர். காமராஜரின் பள்ளி பருவத்தில் விடுதலை வேட்கை தலைவிரித்தாடியது. அவரவர் வாழ்க்கைக்காக படித்து வந்த மாணவர்கள் மத்தியில் அடுத்தவர் வாழ்க்கைக்காக படிப்பை விட்டு வெளியே வந்தவர் காமராஜர். காங்கிரஸ் இயக்கம் மூலம் அரசியல்வாதியாகியதால் வெள்ளைக்கார அரசாங்கத்தால் 9 ஆண்டு காலம் சிறைதண்டனையை அனுபவித்தவர். அதன் பிறகு அவர் 9 ஆண்டு காலம் தமிழக முதல்வராக பதவி வகித்தவர். தான் வாழும் காலத்தில் மக்களுக்கு எதாவது நல்லது செய்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்ததால் தனக்காக ஒரு குடும்பத்தை அமைக்க தவறியவர். அதிகார பதிவியை வைத்து கல்வி, நீர் மேலாண்மை மற்றும் கட்டமைப்பு கொண்ட தொலை நோக்கு திட்டங்களை கொடுத்தார் காமராஜர். ஆனால் இக்கால அரசில்வாதிகள் சிலரைப் போல் அவருக்கென்று எதையும் சேர்த்து வைக்க நினைக்கவில்லை. அவர் காலத்தில் போட்ட அடிப்படை திட்டத்தின் பலனையே இப்போதும் நாம் அனுபவித்து வருகிறோம் எனலாம். தமிழ் இலக்கிய, இலக்கணம் மற்றும் இராமாயணம், மஹாபாரதம் என அனைத்தையும் அறிந்து வைத்து அதன்படி வாழ்ந்த காமராஜர், அது குறித்து எந்த விவாதமும் பொதுவெளியில் நடத்தியது இல்லை. ஆனால் எதிரிகளின் அரசியல் சூழ்ச்சியால் அவர் வீழ்ந்திருக்கிறார். ஆனாலும் எதிரிகள் மீது வஞ்சம் கொண்டதில்லை.
இந்தியாவில் இப்படியொரு மனிதனா என்று உலகமே வாய்பிளந்து நிற்கும் அளவிற்கு வாழ்ந்து காட்டியவர் காமராஜர். அதனால்தான் அவரை பெருந்தலைவர் என்றும் காலா காந்தியென்றும் கர்ம வீரர் என்றும் பலவாறு அழைத்தனர். எத்தனை தலைவர்கள் வந்தாலும் நற்பெயருக்கு அடையாளமாக காமராஜரையே மக்கள் ஏற்றுக் கொண்டனர். அந்த இடத்திற்கு வர பல தலைவர்களின் தொண்டர்களும் முயற்சி செய்தாலும், எந்த முயற்சியும் இல்லாமல் காமராஜர் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். அதனை சிதைக்க காமராஜர் பெயரை கெடுக்கும் வகையில் ஒரு யூடியூப்பர் அவதூறுகளை பரப்பி பார்த்தார். ஆனாலும் எடுபடவில்லை. அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனாலும் இதற்கு முன்னர் இருந்த திமுக அரசு எதையும் கண்டு கொள்ளவில்லை. தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது. அந்த கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவராக காமராஜர் வைக்கப்பட்டுள்ளார். அந்த ஆட்சியில் காங்கிரஸ் கட்சியும் பங்கு வகிக்கிறது. காமராஜருக்கு இங்கே மதிப்பு மரியாதை கொடுக்கப்படுகிறது. இதனால் மற்ற அரசியல் கட்சிகள் பதற்றம் அடைந்து வருகின்றனர்.
யாருடைய பெயரை மறைக்க வேண்டும் என்று முயற்சி செய்தனரோ அவர் பெயரை இளைய தலைமுறை தூக்கி வைத்து கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. முழுவதும் ஆளும் கட்சியான தவெகவுக்கு காமராஜர் குறித்த நற்பெயர் போய்விடுமே என்று அதிர்ந்து போன அரசியல் கட்சிகள் சில வழக்கம் போல் பிறந்த நாள் கொண்டாடும் அரசியல் கட்சிகள் தவிர சில கட்சிகள் இந்த முறை காமராஜரின் பிறந்த நாளை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றன.
nadunilai.com