பெண்களுக்கு பிஜேபி ஆளும் மாநிலங்களில் தான் பாதுகாப்பு இல்லை - மேயர் ஜெகன் பெரியசாமி

Dmk News

பெண்களுக்கு பிஜேபி ஆளும் மாநிலங்களில் தான் பாதுகாப்பு இல்லை - மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழகத்தை பொறுத்தவரை நான்கு அணிகள் களத்தில் இருந்தாலும், அதில் முதன்மையான அணியாக திமுக அணி தான் இருக்கிறது. 5 ஆண்டுகள் மக்களுக்கான பணிகளை தொடர்ந்து திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. கொரோனா மழை வெள்ளக் காலத்தில் யார், மக்கள் பணியாற்றினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஒன்றிய அரசு பல நிதிகள் தராத பட்சத்திலும், அந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் டெல்லி, குஜராத்தை பின்னுக்குத் தள்ளி தமிழகம் முன்னேறியுள்ளது. பெண்களுக்கு பிஜேபி ஆளும் அந்த மாநிலங்களில் தான் பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. தமிழகத்தில் 52 சதவீத பெண்கள் தொழில் முனைவோர்களாக இருந்து வருகின்றனர். 2019ல் உருவாக்கப்பட்ட இந்த வெற்றிக் கூட்டணி தொடர்ந்து இரண்டு எம்.பி. தேர்தல் ஒரு சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என அனைத்திலும் இந்த கூட்டணி தான் வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 20 நாட்களுக்கு பல்வேறு சலசலப்புகள் வரும். அதையும் எதிர்கொண்டு நம்முடைய சாதனைகளை மக்களிடம் சேர்க்க வேண்டும். அனைவரும் சமத்துவமாக வாழ்கிறோம். அதுதான் சிலருக்கு பிடிக்காத நிலை வருகிறது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 2023ல் கடுமையான மழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு சென்று விட்டதாகவும் தான் மட்டும் தான் வந்து தூத்துக்குடியில் பணியாற்றியதாகவும் பேசி இருக்கிறார். ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வந்து விட்டு, 2 பிஸ்கட் பாக்கெட், 4 தண்ணீர் பாக்கெட்டை கொடுத்து விட்டு சென்ற எடப்பாடி தூத்துக்குடி முழு நிலவரம் தெரியாமல் பேச கூடாது. உங்கள் அடிமை தனத்தை பிஜேபி-யிடம் வைத்துக் கொள்ளுங்கள். மழை வெள்ள காலத்தின் போது இங்கு இருக்கின்ற எம்.பி, அமைச்சர், நான் உள்பட மக்கள் பணிகளை செய்து தேவையான உதவிகளை செய்தோம். வரலாறுகளை மறைப்பதும், திரித்து பேசுவதும் தவறு. 3½ ஆண்டுகளாக மகளிருக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. மீண்டும் ஆட்சி அமைந்ததும் ரூ.2000 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். தூத்துக்குடி தற்போது சென்னை, கோவை போன்று அனைத்து தரப்பினர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமடையும் வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய அனைவரும் ஒன்றுமையுடன் பணியாற்றுவோம் என்று பேசினார். 

கூட்டத்தில், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன்,  மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட அணி நிர்வாகிகள் அபிராமிநாதன், கவிதாதேவி, அந்தோணிஸ்டாலின், சீனிவாசன், குபேர்இளம்பரிதி, முத்துராமன் அருணாதேவி, பிரபு, நாகராஜன், அந்தோணி கண்ணன், நிக்கோலாஸ் மணி, பெனில்டஸ், கோகுல்நாத், அருண்குமார், ராமர், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், கிறிஸ்டோபர் விஜயராஜ், ரூபஸ்அமிர்தராஜ், ஆனந்தசேகர், ரூபராஜா, ரெக்ஸ், செல்வலட்சுமி, பரமசிவம், பால்ராஜ், மகேஸ்வரன்சிங், சாகுல்ஹமீது, ரவி, செல்வின், சங்கரநாராயணன், முருகஇசக்கி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், சக்திவேல், ராஜ்குமார், வட்டச்செயலாளர்கள் ரவீந்திரன், முனியசாமி, ராஜாமணி, சுரேஷ், செல்வராஜ், மந்திரகுமார், பொன்பெருமாள், டென்சிங், மனோ, பாலகுருசாமி, சுரேஷ், பாலு, அல்பட், ரவி இளங்கோ, சுரேஷ்மகாராஜா, செந்தில்குமார், பத்மாவதி, கதிரேசன், லியோ ஜான்சன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பொன்னப்பன், கண்ணன், வைதேகி, பவாணி, ரெக்ஸ்லின், ஜெயசீலி, ராஜதுரை, ஜான்சிராணி, பட்சிராஜ், ஜான், முத்துமாரி, வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபரியேல்ராஜ், மாலாதேவி, முன்னாள் மாவட்ட தலைவர் முரளிதரன், கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர்கள் முத்து, தனலட்சுமி, அறங்காவலர் குழு தலைவர்கள் செந்தில்குமார், கந்தசாமி, பகுதி அணி அமைப்பாளர்கள் காசிராஜன், குமார், சுரேஷ்குமார், மற்றும் மணி அல்பட், பிரபாகர், பேச்சிமுத்து, பாஸ்கர், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த திராளானோர் பலர் கலந்து கொண்டனர்.