அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் முக்கிய இடம் பிடித்த கோஷம், யார் அந்த சார்?

A.D.M.K

அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் முக்கிய இடம் பிடித்த கோஷம்,  யார் அந்த சார்?

சென்னை அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சம்பவத்தின் போது குற்றம்சாட்டப்பட்ட நபர் யாரிடமோ சார் சார் என்று பேசினார் என்று அந்த மாணவி கூறியதை வைத்து அந்த சார் யார்? என்கிற கேள்வி  எழுந்துள்ளது. அதையே பிரதானமாக வைத்து இப்போது அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம், கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகம் நடந்து வருவதாகவும், இதை திமுக அரசு தடுக்க தவறி விட்டது என்றும் குற்றம்சாட்டும் அதிமுக, தமிழக அரசுக்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தற்போது தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.     

அந்த வகையில் தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் விவிடி சிக்னல் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது யார் அந்த சார்? என்கிற கோஷங்களே முக்கிய இடத்தை பிடித்திருந்தது. அப்போது 1500 க்கும் மேற்பட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்து தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைப்புச் செயலாளர் சின்னத்துரை,  மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணை செயலாளர் பெருமாள்சாமி, அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பி.ஏ. ஆறுமுகநயினார், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளரும் முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான இரா.சுதாகர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளரும்  தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினருமான பிரபு, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முன்னாள் யூனியன் சேர்மன் ஆனந்த ராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் எம்.பெருமாள், அம்மா பேரவை மாவட்டச் செயலாளரும் ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், மகளிர் அணி நாசரேத் ஜூலியட், அண்ணா தொழிற்சங்கம் டேக் ராஜா, மாணவரணி பில்லா விக்னேஷ், சிறுபான்மை பிரிவு கே.ஜெ.பிரபாகர், விவசாய அணி சுதர்சன்ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு அருண்ஜெபக்குமார்,  தூத்துக்குடி முன்னாள் எம்பி நட்டர்ஜி, ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி,  பகுதி கழக செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ்,  தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், செம்பூர் ராஜ்நாரயணன், அச்சம்பாடு சௌந்தரபாண்டி, மாவட்ட கவுன்சிலர் அழகேசன், பூந்தோட்டம் மனோகரன், உடன்குடி ஒன்றிய பொறுப்பாளர் உரக்கடை குணசேகரன்,  நகரக் கழக செயலாளர் மகேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைப்பாண்டியன், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, பேரூராட்சிக் கழக செயலாளர்கள் காசிராஜன், ரவிச்சந்திரன்,  செந்தில்ராஜகுமார், துரைச்சாமிராஜா, வேதமாணிக்கம், ஆறுமுகநயினார், அசோக்குமார், குமரகுருபரன், கோபாலகிருஷ்ணன் கிங்சிலிஸ்டார்லிங், வீர வெற்றிவேல்,  மாவட்ட அம்மா பேரவை தலைவர் முன்னாள் தக்கார் கோட்டை மணிகண்டன், இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், சுரேஷ்பாபு,  ஆர்.எம்.கே.எஸ்.சுந்தர், பழக்கடை திருப்பதி, மனுவேல்ராஜ், அமிர்தா மகேந்திரன்,  முன்னாள் அரசு வழக்கறிஞர் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரூ மணி, பிள்ளை விநாயகம், மாநகராட்சி எதிர்கட்சிக் கொறடா மந்திரமூர்த்தி, வழக்கறிஞர்கள் கருப்பசாமி, சரவண பெருமாள், முனியசாமி, சிவசங்கர், குமாரவேல், சின்னா சரவணன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் ஜோதிமணி, சத்யாலெட்சுமணன்,   எஸ்.கே.மாரியப்பன், ஸ்ரீவைகுண்டம் பால் துரை, காந்தி ராமசாமி, தலைமைக் கழக பேச்சாளர்கள் முருகானந்தம், தூத்துக்குடி கருணாநிதி,  தூத்துக்குடி மணிகண்டன், மகளிர் அணி நிர்வாகிகள் மெஜூலா, சாந்தி, ஞான புஷ்பம்,  இந்திரா, சண்முகத்தாய்,  ராஜேஸ்வரி, ராதா ஆனந்த் , ஜெயராணி, முன்னாள் சேர்மன் மல்லிகா, ஷாலினி ஸ்மைலா, பத்மாவதி அண்ண பாக்கியம் அன்னதாய் கமலா, ஆறுமுகநேரி சாந்தி, தூத்துக்குடி சாந்தி,   இந்திரா, மகாலிங்கம், கூட்டாம்புளி வேல்சாமி,  சுப்புநாராயணன், ஹார்பர்பாண்டி,  வெங்கடேஷ்,  சங்கர், பாலஜெயம், பண்ணவிளை எப்ராயிம், பண்டாரவிளை பால்துரை, பாஸ்கர், திருத்துவசிங், சுரேஸ்மிரக்லின், பண்டாரவளை மாணிக்கம் ஆறுமுகமங்கலம் ராஜா, ஏரல் ரத்தினம், சிவக்குமார் பால சிவசுப்பிரமணியன், சிறு தண்டநல்லூர் நயினார்,  சாம்ராஜ், சரவணவேல்  சிவகளை நாராயணன், சாத்தான்குளம் அப்பாதுரை பாலமேடு சின்னதுரை, உடன்குடி ராஜ்குமார், செட்டியாபுத்து ராம்குமார், குலசை சங்கரலிங்கம், தோப்பூர் ராஜா நேரு, சுடலை,  டேவிட், மதன்செல்வக்குமார், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, நிலா சந்திரன், யுவன்பாலா, சந்தனபட்டு சகாய ராஜா சொக்கலிங்கம் ஊராட்சி மன்ற தலைவர் சித்திரைபாண்டி  , இருளப்பன், ஆப்பிள் ராமசாமி,  மற்றும் வட்ட செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் என பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர் மேலும் தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் 1500 க்கும் மேற்பட்டோர் காவல் துறையால் சிறை வைக்கப்பட்டனர்.