ஏரல் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு
Thoothukidi collector
ஏரலில் உள்ள அரசு தொழிற்பயிர்சி நிலையத்தில் இந்தாண்டு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024ம் ஆண்டுக்கான பயிற்சியாளர்கள் நேரடி சேர்க்கை மேற்கொள்ள கடந்த டிசம்பர் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதில் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, (2021}ல் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.50 மட்டுமே. விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு நகல்களுடன் திருச்செந்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்று விண்ணப்பித்து உடன் சேர்க்கையினை உறுதி செய்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 99525 56469, 94882 01582, 94990 55813, 94990 55812 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் ஏரல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர், மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், வரைபடக்கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள், கட்டணமில்லா பஸ் பாஸ், இலவச சைக்கிள், வழங்கப்படும். மேலும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் வருகைக்கேற்ப உதவித்தொகை .ரூ.750, மற்றும் தமிழ்ப்புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் தகுதியுள்ள மாணவர், மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 கூடுதல் உதவித்தொகையும் வழங்கப்படும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.